ENG vs SL T20 World Cup 2022 Highlights in tamil: ஆஸ்திரேலிய மண்ணில் 8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில், நடப்பு டி20 உலக கோப்பையில் குரூப்1-ல் இன்று (சனிக்கிழமை) நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டியானது சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது.
டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு; இங்கிலாந்து முதலில் பவுலிங்!
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. அதன்படி, இங்கிலாந்து அணி பந்துவீசும்.
இரு அணி ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்
இங்கிலாந்து:
ஜோஸ் பட்லர்(கேப்டன் / விக்கெட் கீப்பர்), அலெக்ஸ் ஹேல்ஸ், மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், சாம் கர்ரன், டேவிட் மலான், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வூட்
இலங்கை:
பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக(கேப்டன்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்னே, மஹீஷ் தீக்ஷனா, லஹிரு குமார, கசுன் ராஜித
இதையும் படியுங்கள்: HBDViratKohli: டி-20 உலகக் கோப்பை வரலாற்றில் முதல் வீரர்… கோலியின் புதிய சாதனை!
இலங்கை பேட்டிங்
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து, பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் பதுன் நிஷாங்கா அதிரடியாக விளையாடி அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்தார். அரைசதம் விளாசி இருந்த அவர் 5 சிக்சருடன் 67 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகி வெளியேறினர். இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக மார்க் வூட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையும் படியுங்கள்: T20 WC: ‘ஐ.சி.சி சாதகமாக இருப்பதாக நான் நினைக்கவில்லை.’ – அப்ரிடிக்கு பி.சி.சி.ஐ தலைவர் பதிலடி!
இதைத் தொடர்ந்து, 142 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு அதிரடித் தொடக்கம் கொடுத்த கேப்டன் ஜாஸ் பட்லர் 28 ரன்னிலும், அலெக்ஸ் ஹேல்ஸ் 47 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் இலங்கையின் சுழலில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். எனினும் பொறுப்புடன் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 44 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார்.
இறுதியில் இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் இலக்கை கடந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 2வது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதன் காரணமாக நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி குரூப் சுற்றுடன் வெளியேறியுள்ளது.
இதையும் படியுங்கள்: T20 World Cup: அரையிறுதி – இறுதிப் போட்டிகளுக்கு புதிய விதி… ஐ.சி.சி எடுத்த திடீர் முடிவு!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil