Advertisment

தீபாவளி பட்டாசாக வெடித்த கோலி… வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்…!

விராட் கோலிக்கு முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டு மழை பொழிந்து வருகிறார்கள்.

author-image
WebDesk
Oct 24, 2022 11:57 IST
fans reaction about Virat Kohli in IND vs PAK Tamil News

IND vs PAK  T20 World Cup 2022 - Virat Kohli  Tamil News

News about India, Virat Kohli in tamil: 8வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி அதன் தொடக்க ஆட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பாகிஸ்தானை மெல்போர்னில் எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 160 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

Advertisment

கோலிக்கு வாழ்த்து மழை பொழியும் ரசிர்கர்கள்

இந்த ஆட்டத்தில் 160 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணி 6.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்து திணறியது. அதன்பின்னர் ஹர்டிக் பாண்டியாவுடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும், தனது ஸ்டைலில் சிக்ஸர், பவுண்டரிகளை தெறிக்கவிட்டு அசத்தினார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த அவர் 53 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை விளாசி 82 ரன்கள் குவித்தார். இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

publive-image

விராட் கோலியின் இந்த தரமான ஆட்டத்திற்கு அவரை முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டு மழை பொழிந்து வருகிறார்கள். மேலும், சமூக வலைத்தளங்களில் அவரது புகைப்படங்களை பதிவிட்டும் கொண்டாடி வருகிறார்கள். இதனால், கோலி நேற்று இரவு முதல் சமூக மற்றும் இணைய பக்கங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளார்.

publive-image

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

#Cricket #Sports #Australia #Indian Cricket #T20 #Virat Kohli #India Vs Pakistan #Worldcup #Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment