கோலி இல்லையாம், இவர் தான் ஃபேவரைட் பிளேயராம்… அதிரடி வீரரைக் கை காட்டும் கம்பீர்!
இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான கவுதம் கம்பீர், இந்திய அணியில் தனக்கு மிகவும் பிடித்த வீரர் ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி ஆகியோரை விட சிறந்த வீரர் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான கவுதம் கம்பீர், இந்திய அணியில் தனக்கு மிகவும் பிடித்த வீரர் ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி ஆகியோரை விட சிறந்த வீரர் என்று தெரிவித்துள்ளார்.
Suryakumar Yadav is better than Rohit Sharma, KL Rahul and Virat Kohli - former India opener Gautam Gambhir Tamil News
News about Gautam Gambhir - Virat Kohli Tamil News: 8-வது டி20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்தத் தொடருக்கான சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்திய அணி அதன் முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானையும், 2வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தையும் வீழ்த்தி, புள்ளி பட்டியலில் நான்கு புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.
Advertisment
இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியில் விளையாடி வரும் முன்னாள் கேப்டன் விராட் கோலி, தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் பாகிஸ்தானுக்கு எதிரான பரபரப்பான தொடக்க ஆட்டத்தில் 82 ரன்களை குவித்து, அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதேபோல், நெதர்லாந்துக்கு எதிராக நடந்த ஆட்டத்திலும் அரைசதம் விளாசி இருந்த அவர் 62 ரன்களை எடுத்திருந்தார். கோலியின் இந்த நிலையான ஆட்டத்திற்காக அவரை அனைவரும் புகழ்ந்தும், பாராட்டியும் வருகின்றனர்.
கவுதம் கம்பீர் கருத்து
Advertisment
Advertisements
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான கவுதம் கம்பீர், இந்திய அணியில் தனக்கு மிகவும் பிடித்த வீரர் சூர்யகுமார் யாதவ் தான் என்றும், அவர் ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி ஆகியோரை விட சிறந்த வீரர் என்றும் தெரிவித்துள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய கம்பீர், "இந்த அணியில் அவரை விட சிறந்த வீரர் இல்லை. முதல் ஆறு ஓவர்களில் ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், விராட் கோலி ஆகியோர் பேட் செய்ய வேண்டிய சொகுசான வாய்ப்பு அவரிடம் இல்லை. 4-வது இடத்தில் பேட்டிங் செய்ய நீங்கள் வெளியேறும்போது, களம் நின்று, நீங்கள் வேகத்தை அமைத்து மற்ற வீரரிடமிருந்து அழுத்தத்தை குறைக்க வேண்டும். இந்த மொத்த பேட்டிங் வரிசையிலும், மைதானத்திற்கு வெளியே தனது முதல் பந்தை அடிக்கக்கூடிய ஒரு வீரர் இருந்தால், அது சூர்யகுமார் யாதவ் மட்டுமே. ரோஹித் ஷர்மா, கே.எல். ராகுலும் விராட் கோலியும் அதைச் செய்ய முடியும்.
இந்த பேட்டிங் வரிசையில், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி ஆகியோரின் அழுத்தத்தில் இருந்து விடுபடக்கூடிய ஒரே வீரர் சூர்யகுமார் யாதவ்தான். அதனால்தான் மூவரும் தாங்கள் விரும்பியபடி விளையாடுகிறார்கள். சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் சதம் அடிக்க வேண்டும். இந்தியா இந்த உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் ரன்கள் மற்றும் அவர்கள் ரன்களை அடித்த விதத்தில், புள்ளிவிவரங்களைப் பார்த்தால், முதல் மூன்று பேர் எப்போதும் ரன்களை அடிப்பார்கள், அவர்கள் அரைசதம் மற்றும் சதங்கள் அடிப்பார்கள், ஆனால் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தான் தற்போது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்." என்று அவர் கூறியுள்ளார்.
ஐசிசி தரவரிசை: பாபரை முந்திய சூர்யாகுமார்
நடப்பு உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்துக்கு எதிராக சூர்யா அரைசதம் அடித்தார் மற்றும் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆண்டு 19 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் 51.56 என்ற சிறந்த சராசரியுடன், டி-20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானை சூர்யகுமார் முந்திச் சென்றுள்ளார். தற்போது அவர் இந்தப் பட்டியலில் 828 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளார். 849 புள்ளிகளுடன் முகமது ரிஸ்வான் முதலிடத்திலும், 831 புள்ளிகளுடன் டெவோன் கான்வே இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
இந்திய வீரர் சூர்யகுமார் மொத்தமாக 25 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் உட்பட 41.28 சராசரியுடன் 867 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.