Virat Kohli Birthday - ICC T20 World Cup: Virat Kohli becomes 1st player to register a hat-trick in the history Tamil News
Virat Kohli Birthday | King Kohli: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது 34 வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு கிரிக்கெட் ரசிகர்கள், பிரபலங்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய மண்ணில் தற்போது நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.
Advertisment
Advertisements
இந்த உலகக் கோப்பையில் தனது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசுர ஃபார்மில் இருக்கும் கோலி, பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் எடுத்து மேட்ச்-வின்னிங் நாக் விளையாடினார். அதன்பிறகு, நெதர்லாந்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 62 ரன்கள் குவித்தார். பெர்த்தில் தென்னாப்பிரிக்காவுடனான ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்த பிறகு, அடிலெய்டு ஓவல் மைதானத்தில் வங்க தேசத்துக்கு எதிராக ஒரு முக்கியமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கோலி. அந்த ஆட்டத்தில் அரைசதத்தையும் பதிவு செய்த அவர் 64 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்த 4 ஆட்டங்களில் கோலி 3 அரைசதங்களை பதிவு செய்துள்ளார். இதன் மூலம், டி-20 உலகக் கோப்பை வரலாற்றில் மூன்று முறை 3 அல்லது அதற்கு மேற்பட்ட அரைசதம் அடித்த முதல் வீரர் என்கிற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி.
டி-20 உலகக் கோப்பையில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியல்
முன்னதாக, விராட் கோலி வங்க தேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் 15 ரன்கள் எடுத்ததன் மூலம் டி20 உலகக் கோப்பையில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு இலங்கை வீரர் மஹேல ஜெயவர்த்தனே 1016 ரன்கள் எடுத்து டி20 உலகக் கோப்பையில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்திருந்த நிலையில், தற்போது விராட் கோலி 1017 ரன்களுக்கு மேல் எடுத்து, ஜெயவர்த்தனேவின் சாதனையை முறியடித்து அசத்தினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil