T20 World Cup – India vs Pakistan – Hardik Pandya Tamil News: 8-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்த தொடருக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடைபெற்ற நிலையில், அவை நேற்றுடன் நிறைவடைந்தன. இந்த தகுதி சுற்றின் முடிவில் இலங்கை, நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் அடுத்த சுற்றான சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
சூப்பர் 12 சுற்றில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் உள்ளன. இவற்றுடன் இந்த 4 அணிகளும் சேர்க்கப்பட்டு, இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும்.
இந்த தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அதன் முதல் லீக் போட்டியில் வருகிற ஞாயிற்று கிழமை (அக்டோபர் 23 ஆம் தேதி) பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இப்போட்டி ஆஸ்திரேலியவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது. வழக்கம் போல் இந்த போட்டிக்கு இருநாட்டு மற்றும் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

India vs Pakistan: ‘பாகிஸ்தானை வெல்ல ரத்தம், வியர்வை, கண்ணீரரைத் தருவேன்’ – ஹர்டிக் பாண்டியா</strong>
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக, இந்தியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தனது சமூக வலைதள ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ கிரிக்கெட் ரசிர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இணையவாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பாகிஸ்தானை தோற்கடிக்க தங்கள் இரத்தத்தையும் வியர்வையும் கண்ணீரையும் கொடுப்போம் என்று ரசிகர்களுக்கு போர்க்குரல் கொடுக்கிறார் ஹர்திக் பாண்டியா.

மிடில் ஆர்டரில் இந்திய அணியின் மிகப்பெரிய சொத்துகளில் ஒருவராக ஹர்திக் பாண்டியா இருந்து வருகிறார். பவர்-ஹிட்டிங் டிஸ்ட்ரக்டர் தன்னால் கேம்களை முடிப்பது மட்டுமல்லாமல், அவரது அற்புதமான பந்துவீச்சினால் எதிரணிக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். இது இந்திய அணிக்கு கூடுதல் பலம் கொடுக்கிறது. அவர் சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் போது தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா வெளியிட்டுள்ள வீடியோவில், “இந்த அணி, இந்த குடும்பம், அனைத்தையும் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ரத்தம், வியர்வை, கண்ணீர் என அனைத்துமே நமக்கு முன்னால் இருக்கும் உலகக் கோப்பை மட்டுமே. ஒவ்வொரு அடியிலும் உங்களை நாங்கள் நம்புகிறோம், ”என்று அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் முடிவடைந்த ஆசிய கோப்பை 2022 போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இரண்டு முறை சந்தித்தன. இதில் தொடக்க ஆட்டத்தில் இந்தியாவும், சூப்பர் 4 ஆட்டத்தில் பாகிஸ்தானும் என இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வென்றன. கடந்த ஆண்டு துபாயில் நடந்த டி-20 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் இந்தியாவை பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இதனால், அந்த உத்வேகத்துடன் பாகிஸ்தான் களமிறங்கும். இந்திய அணி பழைய கணக்குகளுக்கு பதிலடி கொடுத்து தொடரை வெற்றியுடன் தொடங்கவே நினைக்கும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
Together 🇮🇳❤️ pic.twitter.com/8GHedKhGJF
— hardik pandya (@hardikpandya7) October 21, 2022
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil