Australian were seen using this ploy during their game against England. (Screengrab)
T20 World Cup - Slow Over Rate In Cricket Tamil News: ஆஸ்திரேலியாவில் 8வது டி-20 உலகக் கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை நடக்கும் இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் களமாடியுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட உள்ளன. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக தகுதி சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
Advertisment
ஐசிசியின் புதிய விதி
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC – ஐசிசி) விளையாட்டின் தரத்தை மேம்படுத்துவதற்காக கிரிக்கெட்டில் சில விதிகளை தொடர்ந்து மாற்றியமைத்து வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் 5 புதிய விதிகளை ஐசிசி அறிமுகப்படுத்த உள்ளது. இதில், ஒரு விதி தான் 'ஸ்லோ ஓவர் ரேட்டுக்கு பீல்டிங் பெனால்டி' கொடுக்கப்படுவது.
இந்த விதியின்படி, அணிகள் அதிக விகிதத்திற்கு இணங்கத் தவறினால் பீல்டிங் அபராதம் விதிக்கப்படும். ஸ்லோ-ஓவர் வீதத்தில் ஒரு அணி குற்றம் சாட்டப்பட்டால், மீதமுள்ள டெத் ஓவர்களுக்கு மேலும் ஒரு கூடுதல் பீல்டர் வட்டத்திற்குள் வைக்கப்படுவார்.
எடுத்துக்காட்டாக, ஒரு அணி இறுதி ஓவரை (20வது ஓவர்) வீச திட்டமிட்ட நேரத்தில் தொடங்கத் தவறினால், இறுதி ஓவரில் ஒரு கூடுதல் பீல்டரை 30-யார்டு வட்டத்திற்குள் வைக்க வேண்டும். கட்டாயமாக 90 நிமிட இடைவெளியில் ஒரு அணி 18 ஓவர்களை மட்டுமே முடித்துள்ளது என்று வைத்துக்கொள்வோம், அடுத்த 2 ஓவர்களுக்கு அந்த அணி ஒரு கூடுதல் பீல்டரை 30 யார்டு வட்டத்திற்குள் வைத்திருக்க வேண்டும்.
வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவு பணியாளர்களுக்கான ஐசிசி நடத்தை விதிகளின் பிரிவு 2.22 குறைந்த பட்சம் அதிக விலைக் குற்றங்கள் தொடர்பானது என்றும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பந்துவீசத் தவறிய வீரர்கள் ஒவ்வொரு ஓவருக்கும் போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்படும் என்றும் ஐசிசி-யின் விதி கூறுகிறது.
டி-20 கிரிக்கெட்டில் 'ஸ்லோ ஓவர் ரேட்டுக்கு பீல்டிங் பெனால்டி' விதி முதன்முதலில் கடந்த ஜனவரி 16, 2022 அன்று வெஸ்ட் - இண்டீஸ் மற்றும் அயர்லாந்து இடையேயான டி-20 போட்டியில் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே ஆட்டத்திலும் பயன்படுத்தப்பட்டது.
ஆஸ்திரேலிய அணியின் பலே திட்டம்
இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் நேரத்தை மிச்சப்படுத்தவும், பீல்டிங் பெனால்டிகளைத் தவிர்க்கவும் ஆஸ்திரேலிய அணியினர் புதிய திட்டம் போட்டுள்ளனர். அது எப்படி என்றால், அவர்கள் பவுண்டரி கோட்டிற்கு வெளியின் அணியின் பெஞ்சில் இருக்கும் வீரர்களை எக்ஸ்ட்ரா ஃபீல்டர்களாக பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக, பவர்பிளேயின் போது அந்த வீரர்கள் எக்ஸ்ட்ரா ஃபீல்டர்களாக செயல்படுகிறார்கள். அது அவர்களுக்கு பந்தை விரைவாக திரும்பப் பெறவும், நேரத்தை மிச்சப்படுத்தவும் மற்றும் பெனால்டி இருந்து தப்பிக்கவும், உதவுகிறது.
இது குறித்து ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டர் வீரர் ஆஷ்டன் அகர் ஒரு வீடியோ தங்கள் அணியின் புதிய வியூகம் பற்றி விளக்கியுள்ளார். அவர் ந்த வீடியோவில் பேசியுள்ளது பின்வருமாறு:-
“பவர்பிளேயில், வெளிப்படையாக பந்து சுற்றி பறக்கிறது. மேலும் கிரிக்கெட்டின் ஒரு பகுதியாக பந்தை வீரர்கள் சென்று எடுக்க வேண்டியிருக்கும் போது நீங்கள் நேரத்தை இழக்கிறீர்கள். எனவே நேரத்தை நிர்வகிப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. எனவே, மைதானத்தைச் சுற்றி பெஞ்சில் இருக்கும் தோழர்களை நிறுத்துவது உங்களுக்கு அங்கும் இங்கும் 10 வினாடிகளைச் சேமிக்கும். சாத்தியமாக, அதுவும் நாளின் முடிவில் கூடுகிறது. இது உண்மையில் உங்களுக்கு ஒரு நன்மையைத் தரவில்லை என்றாலும், அது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. அதை பவர்பிளேயில் செய்வது பொது அறிவு என்று நான் நினைக்கிறேன்." என்று ஆஷ்டன் அகர் கூறியுள்ளார்.
A clever ploy from the Aussies who are keen to avoid the fielding restriction penalty if overs aren't bowled in time during this #T20WorldCuppic.twitter.com/5e73KABQcd