IND vs BAN T20 World Cup 2022 highlights in tamil: ஆஸ்திரேலிய மண்ணில் 8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடருக்கான சூப்பர் 12 சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இந்தியா – வங்க தேச அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் இன்று புதன் கிழமை (நவம்பர் 2 ஆம் தேதி) அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்கிறது.
டாஸ் வென்ற வங்க தேசம் பவுலிங்
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்க தேச அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
Rohit Sharma flips the coin and Shakib calls it right. Bangladesh have decided to field first.
Watch all the action from the ICC Men's #T20WorldCup 2022 only on Star Sports & Disney+Hotstar!#INDvBAN #BelieveInBlue #INDvsBAN pic.twitter.com/4IEjql2Cg4— Star Sports (@StarSportsIndia) November 2, 2022
இந்தியா பிளேயிங் லெவன்:
கேஎல் ராகுல், ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்
வங்க தேச பிளேயிங் லெவன்:
நஜ்முல் ஹொசைன் சாண்டோ, லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), அஃபிஃப் ஹொசைன், யாசிர் அலி, மொசாடெக் ஹொசைன், ஷோரிஃபுல் இஸ்லாம், நூருல் ஹசன்( விக்கெட் கீப்பர்), முஸ்தாபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத், தஸ்கின் அகமது
ராகுல், கோலி அரைசதம்
இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா - ராகுல் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், கேப்டன் ரோகித் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். எனினும், களத்தில் இருந்த ராகுல் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 32 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் அடித்து 50 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பிறகு வந்த சூர்யகுமார் யாதவ் 4 பவுண்டரிகளை விரட்டி 30 ரன்களுடன் அவுட் ஆனார்.
தொடர்ந்து வந்த ஹர்திக் பாண்டியா 5 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் (ரன் அவுட்) 7 ரன்னிலும், அக்சர் படேல் 7 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அரைசதம் அடித்து கடைசி வரை களத்தில் இருந்த விராட் கோலி 64 ரன்களும் (44 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்ஸர்), அஸ்வின் 13 ரன்களும் எடுத்தனர்.
வங்க தேச அணி தரப்பில் ஹசன் மஹ்மூத் 3 விக்கெட்டுகளையும், கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
மழை குறுக்கீடு
வங்க தேச அணி 185 ரன்கள் கொண்ட வெற்றி அதிரடியாக துரத்தியது. தொடக்க வீரர் லிட்டன் தாஸ் அரைசதம் அடித்து மிரட்டினார். அந்த அணி 7 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்தது. லிட்டன் தாஸ் 59 ரன்களுடனும், ஷாட்டோ 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில், திடீரென மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் தடைபட்டது. அப்போது, வங்க தேச அணி வெற்றிபெற 78 பந்துகளில் 119 ரன்கள் தேவைப்பட்டது.
மீண்டும் தொடங்கிய ஆட்டம்; வங்காளதேச வெற்றிக்கு 54 பந்துகளில் 85 ரன்கள் தேவை
சில நிமிடங்களுக்குப்பின் மழை நின்றதையடுத்து ஆட்டம் மீண்டும் தொடங்கியது. அதேவேளையில், மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டன. அதன்படி, டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி, வங்காளதேச அணி 16 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது.
இதனையடுத்து, களத்தில் இறங்கி பேட்டிங் செய்த வங்க தேச அணியில், அதிரடியாக ஆடிய லிண்டன் தாஸ் 27 பந்தில் 60 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரரான நஜ்முல் ஹொசைன் சாண்டோ 21 ரன்னிலும், வேகமாக மட்டையை சுழற்றிய கேப்டன் ஷகிப் அல் ஹசன் 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து வந்த அஃபிஃப் ஹொசைன் அர்ஷ்தீப் கொடுத்து அவுட் ஆனார். யாசிர் அலி (1) மற்றும் மொசாடெக் ஹொசைன் (6) ஹர்டிக் பாண்டியா பந்தில் அவுட் ஆகினர்.
இறுதியில், வங்க தேச அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஸ்ட்ரைக்கில் இருந்த நூருல் ஹசன் அர்ஷ்தீப் சிங் வீசிய 2வது பந்தில் சிக்ஸர் அடித்து மிரட்டினார். ஆனால், நிதானமாக யார்க்கர்களை இறக்கி விட்டார் அர்ஷ்தீப் சிங். இதனால், இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில், அர்ஷ்தீப் சிங் ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளையும், முகமது ஷமி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர். இந்த அசத்தல் வெற்றியின் மூலம் இந்தியாவின் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
Bangladesh gave it their all, but India reign in Adelaide 🙌#T20WorldCup | #INDvBAN | 📝: https://t.co/HSr0Div7W0 pic.twitter.com/tnTkAF1j7E
— T20 World Cup (@T20WorldCup) November 2, 2022
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.