India vs Bangladesh {IND vs BAN } T20 World Cup 2022 Live Streaming | இந்தியா vs பங்களாதேஷ் {IND vs BAN } டி20 உலகக்கோப்பை 2022 நேரடிஒளிபரப்பு: ஆஸ்திரேலிய மண்ணில் 8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடருக்கான சூப்பர் 12 சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இந்தியா - வங்க தேச அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் நாளை புதன் கிழமை (நவம்பர் 2 ஆம் தேதி) அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை, நடப்பு டி20 உலக கோப்பையில் அதன் முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானையும், 2வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தையும் வீழ்த்தியது. ஆனால், நேற்று முன் தினம் ஞாயிற்று கிழமை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த 3வது லீக் ஆட்டத்தில் இந்தியா தோல்வி கண்டது. இதனால், புள்ளிப் பட்டியலில் இந்தியா அதே நான்கு புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
மறுபுறம், தொடக்க ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்திய வங்க அணி, தென் ஆப்பிரிக்காவிடம் 104 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இதன்பிறகு, நேற்று முன் தினம் நடந்த ஆட்டத்தில் (அக்டோபர் 30 ஆம் தேதி) ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது. அந்த அணி 4 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளது.
வங்கதேச அணியின் நெட் ரன்ரேட் (-1.533) இந்தியாவை (+0.844) விட குறைவு. எனவே, அந்த அணி புள்ளிப் பட்டியலில் இந்தியாவுக்கு கீழ் உள்ளது. அரையிறுதிக்கு முன்னேற புள்ளிகளும், நெட் ரன்ரேட்டும் முக்கிய பங்கு வகிப்பதால், இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதனால், இந்த ஆட்டம் இவ்விரு அணிகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஆதலால், போட்டியை வசபடுத்த இரு அணிகளும் தீவிரமாக முயற்சிக்கும். எனவே, இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
டி-கே-வுக்கு பதில் பண்ட்
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் தொடக்க வீரர்களான கே.எல்.ராகுலும், கேப்டன் ரோகித் சர்மாவும் ஒருசேர அதிரடி காட்ட தவறி வருகின்றனர். இதனால், இந்திய அணிக்கு வலுவான கிடைக்காமல் போய்விடுகிறது. மேலும், அந்த அழுத்தம் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் மீது விழுந்து விடுகிறது. எனவே, தொடக்க ஜோடி ரன் மழை பொழிய வேண்டிய கட்டயாத்தில் உள்ளனர். கோலி மற்றும் சூர்யகுமாரின் தற்போதைய ஃபார்ம் அணியின் பேட்டிங் வரிசைக்கு வலு சேர்க்கிறது.
வேகப்பந்துவீச்சில் அர்ஷ்தீப், ஷமி, புவனேஷ்வர் ஆகியோர் வழக்கமான விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டி வருகிறார்கள். அவர்கள் டெத் ஓவர்களில் மட்டும் ரன்களை கசிய விடாமல் இருந்தால், அணிக்கு நல்ல பலம் கிடைக்கும். சுழலில் அஸ்வின் மெச்சும் படியான பந்துவீச்சை தற்போதுவரை வெளிப்படுத்தவில்லை. அவருக்கு பதில் யுஸ்வேந்திர சாஹலை கொண்டு வரலாம். மற்றொரு கட்டாய மாற்றமாக தினேஷ் கார்த்திக் உள்ளார். அவர் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி விவரங்கள்
போட்டி: இந்தியா vs வங்கதேசம், சூப்பர் 12, குரூப் 2
தேதி - நேரம்: நவம்பர் 2, பிற்பகல் 1:30
இடம்: அடிலெய்ட் ஓவல், அடிலெய்டு
நேரலை ஸ்ட்ரீமிங்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
IND vs BAN: ஆடுகளம் எப்படி?
இந்தப் போட்டி அடிலெய்டில் நடைபெறவுள்ளது. இங்குள்ள அடிலெய்ட் ஓவல் ஆடுகளம் பேட்டிங்கின் சொர்க்கம். 160 என்பது இங்கு எடுக்கப்பட்ட சராசரி ரன்கள் ஆகும். சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சு இங்கு ஓரளவுக்கு எடுபடாது.
IND vs BAN: இரு அணியின் உத்தேச வீரர்கள் பட்டியல்
இந்தியா:
கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஹூடா, ரிஷப் பண்ட், அஷ்வின் அல்லது அக்சர் படேல், ஷமி, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங்
வங்க தேசம்:
நஜ்முல் சாண்டோ, சௌமியா சர்க்கார், லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன், யாசிர் அலி, அஃபிஃப் ஹொசைன், நூருல் ஹசன், முஸ்தாபிசுர் ரஹ்மான், தஸ்கின் அகமது, மொசாடெக் ஹொசைன், ஹசன் மஹ்மூத்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.