Advertisment

ஸ்பின்னர் பூமி; கோலியின் சொர்க்கபுரி… அடிலைய்டு மைதானத்தில் இந்தியாவுக்கு என்ன சாதகம்?

அடிலெய்டு ஓவல் மைதானத்தின் பரிமாணங்கள் பெரும்பாலான ஆஸ்திரேலிய மைதானங்களுடன் ஒப்பிடும்போது அசாதாரணமானது. இங்குள்ள ஸ்கொயர் பவுண்டரிகள் 60-65 மீட்டர் வரை இருக்கும்.

author-image
WebDesk
New Update
Ind vs Eng semi final; adelaide oval ground facts in tamil

Virat Kohli record in adelaide oval ground and its facts Tamil News

India vs England T20 World Cup Semi-Final: adelaide oval ground, Virat Kohli Tamil News: கடந்த இரண்டு வருடங்களாக டி20 போட்டிகளில் இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடந்துள்ளன. ஆனால் இந்த இரு அணியினரும் ஒரு தசாப்த காலமாக டி20 உலகக் கோப்பையில் ஒருவரையொருவர் எதிர்கொண்டு விளையாடவில்லை. அல்லது 2013க்குப் பிறகு, ஐசிசி நடத்திய எந்த நாக் அவுட் போட்டிகளிலும் விளையாடவில்லை. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அவ்வகையில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் அடிலெய்டு எப்படி? அங்கு இந்த அணிகள் எப்படி வெற்றியை ருசிக்கலாம் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

Advertisment

ஸ்பின்னர் பூமி - அடிலெய்டு மைதானம்

publive-image

அடிலெய்டு ஓவல் மைதானத்தின் பரிமாணங்கள் பெரும்பாலான ஆஸ்திரேலிய மைதானங்களுடன் ஒப்பிடும்போது அசாதாரணமானது. இங்குள்ள ஸ்கொயர் பவுண்டரிகள் 60-65 மீட்டர் வரை இருக்கும். அதே சமயம், ஸ்ட்ரைட் பவுண்டரிகள் பொதுவாக மிக நீளமாக, சுமார் 80 மீட்டர் வரை இருக்கும். இப்படி இருப்பது, இந்தியாவிற்கு ஒரு சிறிய நன்மை உள்ளது. ஏனெனில், இந்திய அணி அதன் சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டத்தில் வங்க தேச அணியை இங்குதான் எதிர்கொண்டது. அந்த ஆட்டத்தில் இந்தியா டிஎல்எஸ் முறைப்படி வங்க தேசத்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதேசமயம், இங்கிலாந்து அணி இங்கு முதல் முறையாக விளையாடுகிறது.

நடப்பு டி20 உலகக் கோப்பையில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்த ஆறு ஆட்டங்களில், முதலில் பேட்டிங் செய்த அணிகளின் சராசரி ஸ்கோர் 157 ஆகும். அதை, டிஃபன்ஸ் செய்த அணிகளே நான்கு முறை வெற்றி பெற்றுள்ளன. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் குறைந்தது 158 ரன்கள் எடுத்துள்ளது. வினோதமாக, டாஸ் வென்ற அணி ஆறு போட்டிகளிலும் தோல்வி கண்டுள்ளது.

சுழற்பந்து வீச்சாளர்கள் (ஓவருக்கு 7.33 ரன்கள்) வேகப்பந்து வீச்சாளர்களை விட (7.67) ஓரளவு சிக்கனமாகவே இங்கு ரன்களை விட்டுக்கொடுத்து உள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களுடன் (17.8) உடன் ஒப்பிடும்போது ஒவ்வொரு 19.5 பந்துகளுக்கும் ஒரு விக்கெட் என்ற ஸ்ட்ரைக் ரேட்டை சுழற்பந்துவீச்சாளர்கள் கொண்டுள்ளனர்.

கோலியின் சொர்க்கபுரி

publive-image

வங்கதேசத்துக்கு எதிரான தனது அரைசதத்திற்குப் பிறகு விராட் கோலி பேசுகையில், "இந்த மைதானத்தில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். "நான் ஸ்டேடியத்திற்குள் நுழைந்தவுடன், அது என்னுடைய நாட்டு மைதானத்தில் விளையாடுவதைப் போல் உணர்கிறேன். இந்த மைதானமும் இந்த விக்கெட்டும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது." என்று கூறினார்.

கோலியின் 14 இன்னிங்ஸ்களில் ஐந்து சதங்கள் மற்றும் மூன்று அரைசதங்கள் கிடைத்துள்ளன.

publive-image

இந்தியாவிற்கு வெளியே அவருக்குப் பிடித்த மைதானத்தில் அவரைக் கட்டுப்படுத்த இங்கிலாந்து ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு அடில் ரஷித் அவர்களின் சிறந்த தேர்வாக இருக்கலாம். இந்த டி20 உலகக் கோப்பையில் சுழலுக்கு எதிராக கோலி ஒப்பீட்டளவில் கவனமாக இருந்தார். 113.55 ஸ்ட்ரைக் ரேட் (வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக 151.69 உடன் ஒப்பிடும்போது) மற்றும் ரஷீத் இதற்கு முன்பு அவருக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி இருந்தார். அனைத்து டி20களிலும் 59 பந்துகளில் 63 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு முறை கோலியை ஆட்டமிழக்க செய்துள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Virat Kohli India Vs England Sports Cricket T20 Worldcup
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment