India vs England T20 World Cup Semi-Final Report Card in tamil: ஆஸ்திரேலிய மண்ணில் 8-வது டி- 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இன்று அடிலெய்டு ஓவலில் நடந்த 2-வது அரைஇறுதியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்ற நிலையில், அந்த அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 63 ரன்களும் கோலி 50 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து 169 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களான அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லர் ஜோடி அதிரடியாக ரன்களை குவித்து, அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இதனால், இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. பேட்டிங்கில் ரன் மழை பொழிந்த அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்துகளில் 4 பவுண்டர்கள் 7 சிக்ஸர்களுடன் 86 ரன்களும், கேப்டன் ஜோஸ் பட்லர் 49 பந்துகளில் 9 பவுண்டரிங்க்ள் 3 சிக்ஸர்களுடன் 80 ரன்களும் எடுத்தனர்.
கேஎல் ராகுல் (5 பந்துகளில் 5 ரன்கள்)
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் இந்திய தொடக்க வீரர் கே.எல்.ராகுலின் சீரற்ற ஃபார்ம் தொடர்ந்தது. ஒரு பவுண்டரியை மட்டும் விரட்டிய ராகுல் 1.4வது வோக்ஸ் வீசிய பவுன்சர் பந்தில் விக்கெட் கீப்பர் பட்லர் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மேலும், ராகுல் 5 பந்துகளை எதிர்கொண்ட நிலையில், 5 ரன்கள் மட்டும் எடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதன் மூலம் பெரிய அணிகளுக்கு எதிராக ராகுலின் ஆட்டம் மீண்டும் பேசப்படும் புள்ளியாக மாறியுள்ளது.
டி20 உலகக் கோப்பையில் முதல் எட்டு அணிகளுக்கு எதிராக கேஎல் ராகுலின் ரன் குவிப்பு பின்வருமாறு:-
3(8) vs பாகிஸ்தான் – துபாய் – 2021
18(16) vs நியூசிலாந்து – துபாய் – 2021
4(8) vs பாகிஸ்தான் – மெல்போர்ன் – 2022
9(14) vs தென் ஆப்ரிக்கா பெர்த் – 2022
5(5) vs இங்கிலாந்து – அடிலெய்டு – 2022
ரோகித் சர்மா (28 பந்துகளில் 27 ரன்கள்)
கேப்டன் ரோகித் சர்மா ஒரு முக்கியமான இன்னிங்ஸின் போது முற்றிலும் தொடர்பில்லாதவராக இருந்தார். அரையிறுதியில், 42 டாட் பால்களை (7 மெய்டன் ஓவர்கள்) சாப்பிடுவது ஒரு முன்னணி தொடக்க வீரருக்கு அழகல்ல. ரோகித்தின் டைமிங் சரியாக இல்லாதால், அவரது பேட்டிற்கு பந்து வர சிறிது தாமதமாக இருந்தது. இதனால், அணிக்கு வலுவான தொடக்கம் கொடுக்கவும், ரன்கள் குவிக்கவும் திணறினார். அவர் ஒரு நாக் அவுட் போட்டியில் விளையாடுவது போல் இருக்கவில்லை.
கிறிஸ் வோக்ஸ் வீசிய 8.5 ஓவரில் பந்தை ஸ்லாக் ஸ்வீப் அடிக்க முயற்சி செய்த ரோகித் சம் கரண் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 28 பந்துகளில் 4 பவுண்டரியை விரட்டி இருந்த அவர் 27 ரன்களுடன் அவுட் ஆனார்.
விராட் கோலி (40 பந்துகளில் 50 ரன்கள்)
அடிலெய்டு ஓவல் மைதானத்தில் கோலியின் அபாரமான ஆட்டம், இறுதியாக அந்த மைதானத்தில் முதல்முறையாக ஆட்டமிழந்தபோது முடிவுக்கு வந்தது. இந்த ஆட்டத்தில் கோலி தொடரில் தனது நான்காவது அரை சதத்தை விளாசி இருந்தார். ஆனால், அதிரடியில் மிரட்டும் முன் அவர் ஆட்டமிழந்து வெளியேறினார். எனினும், வோக்ஸ் பந்தில் அவர் எக்ஸ்ட்ரா கவரில் விளாசி சிக்ஸர் பார்க்கவே மிரட்டலாக இருந்தது. 40 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 50 ரன்கள் எடுத்தார் கோலி.
சூர்யகுமார் யாதவ் (10 பந்துகளில் 14)
சூர்யகுமார் யாதவுக்கு இது ஒரு மோசமான நாள் இருந்து போனது. ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியை அடித்து நொறுக்கிய அவர் அடில் ரஷீத் பந்தை விரட்ட முயன்று ஆட்டமிழந்தார்.
ஹர்திக் பாண்டியா (33 பந்துகளில் 63)
இந்தியாவின் ஸ்கோரை உயர்த்தும் ஒரு ஃபினிஷராக கச்சிதமாக ஹர்திக் பாண்டியா விளையாடி இருந்தார். அவரின் அதிரடியில் மூலம் இந்திய அணி கடைசி நான்கு ஓவர்களில், 58 ரன்கள் எடுத்தது. அதில் பாண்டியா விரட்டிய நான்கு பவுண்டரிகள் மற்றும் ஐந்து வியக்க வைக்கும் சிக்ஸர்கள் உள்ளடங்கும் ஆனால், பந்துவீச்சில் பாண்டியா சற்று அதிக ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார். மூன்று ஓவர்களில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
ரிஷப் பந்த் (4 பந்துகளில் 6 ரன்கள்)
தினேஷ் கார்த்திக்கை விட அதிகம் விரும்பப்பட்ட ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனதால் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இருப்பினும், இந்தியாவின் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியாவை காப்பாற்ற பந்த் தனது விக்கெட்டை தியாகம் செய்தார்.
ரவிச்சந்திரன் அஸ்வின்
சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்பட்ட அடிலெய்டு ஆடுகளத்தில் ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறி இருந்தார். இங்கிலாந்து கேப்டன் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி அடித்து ஆடுவது என முடிவு செய்தது முதல் அஸ்வினை டார்கெட் வைத்து அடித்தனர். இரண்டு ஓவர்களை மட்டும் வீசியிருந்த அஸ்வின் 27 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
அக்சர் படேல்
இடது கை சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் 3 ஓவர்கள் வீசி 28 ரன்களை விட்டுக்கொடுத்து விக்கெட்டுகள் ஏதும் வீழ்த்தவில்லை. இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் இணைந்து ஐந்து ஓவர்களில் 55 ரன்களை விட்டுக் கொடுத்தனர். இதனுடன் ஒப்பிடும் போது, இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் தங்களுக்கு இடையே ஏழு ஓவர்கள் வீசி 41 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தனர். நான்கு ஓவர்களில் படேல் விக்கெட் ஏதும் எடுக்காமல் 30 ரன்கள் கொடுத்தார்.
புவனேஷ்வர் குமார்
பவர்பிளேயில் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் புவனேஷ்வர் குமாரை எதிர்கொண்டனர். புவனேஷ்வர் குமாருக்கு எதிராக ஜோஸ் பட்லர் தொடக்க ஓவரில் மூன்று பவுண்டரிகளை அடித்தார். இதுவே அவர் ரன் வேட்டையை தொடங்க இருக்கிறார் என்பதற்கான பிள்ளையார் சுழியாக இருந்தது.
முகமது ஷமி
ஷமி பந்து வீச்சில் சுமாராக வீசியது மட்டுமின்றி, ஃபீல்டிங்கிலும் அவர் மோசமாக இருந்தார். ஹேல்ஸ் ஹர்திக் பாண்டியா பந்தில் ஃபைன் லெக் திசையில் பந்தை விரட்டிய போது இது நடந்தது. ஒரு ஓவர் வீசிய பிறகும் முகமது ஷமி, மைதானத்தின் அந்தப் பகுதியைக் காத்து நின்றார். அவர் பந்தில் விளையாடினார் மற்றும் ரைம் அல்லது காரணம் இல்லாமல் ரிலே வீசுதலைத் தேர்வு செய்தார். ஷமி பந்தை கீப்பரிடம் எளிதாக வீசியிருக்கலாம், ஆனால் அவர் இந்த அவுட்-ஆஃப்-பாக்ஸுக்குத் தயாராக இல்லாத ஒரு அணியினரிடம் லாப் செய்தார்.
அர்ஷ்தீப் சிங்
அர்ஷ்தீப் சிங் அனேகமாக சிறந்த பந்துவீச்சாளர். இரண்டு ஓவர்களை முன்னோக்கி வீசிய அவர் வெறும் 15 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.