IND vs PAK T20 World Cup 2022: Virat Kohli in conversation with Hardik Pandya Tamil News: 8வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி அதன் தொடக்க ஆட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பாகிஸ்தானை மெல்போர்னில் எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 160 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.
வலுவான பார்ட்னர்ஷிப்… மறக்க முடியா ஆட்டம்
இந்த ஆட்டத்தில் இந்திய அணி 6.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்து திணறியது. அப்போது களத்தில் இருந்த விராட் கோலியுடன் ஹர்டிக் பாண்டியா ஜோடி சேர்த்தார். இந்த பொறுமையாக விளையாடி அணியின் ரன் ரேட்டை உயர்த்தி வந்தனர். 12 ஓவர்களுக்கு முன்பு வரை ஸ்ட்ரைக்கை சுழற்றி வந்த இந்த ஜோடி, 12 வது அதிரடி காட்ட ஆரம்பித்தனர்.
முகமது நவாஸ் வீசிய 12வது ஓவரில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு பாண்டியா மிரட்டல் விடுத்த நிலையில், கோலி தனது பங்கிற்கு ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார். பின்னர் மீண்டும் ஸ்ட்ரைக்கில் இருந்த பாண்டியா ஒரு சிக்ஸரை பறக்க விட்டார். இதன் பிறகு அணியின் ஸ்கோர் விறுவிறு என்று ஏறியது. இந்த ஜோடியில் சிறப்பாக மட்டையைச் சுழற்றி வந்த கோலி அரைசதம் அடித்தார். மறுபுறம் முழங்கால் மூட்டு வலியால் அவதியுற்ற பாண்டியா தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தார்.
எனினும், கோலி தோள்களுக்கு வலு சேர்த்த அவர், கோலியின் ஓட்டத்திற்கு ஈடு கொடுத்து ரன்கள் ஓட்டினார். மேலும், கோலி சரியான ஷாட்களை அடித்து ஆட மறுமுனையில் இருந்து கொண்டு தொடர்ந்து ஊக்கம் கொடுத்தார் பாண்டியா. ஹரிஸ் ரவுஃப் வீசிய 18வது ஓவரில் கோலி 2 சிக்ஸர்களை பறக்கவிட்டபோது ஆனந்த துள்ளல் போட்டார்.
ஆனால், கோலியுடன் களத்தில் இருந்து வெற்றியைக் கொண்டாட தவறி இருந்தார். இந்திய அணி வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19வது ஓவரின் முதல் பந்தை சந்தித்த பாண்டியா கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். எனினும், 37 பந்துகளில் 2 சிக்ஸர் 1 பவுண்டரியுடன் 40 ரன்கள் எடுத்த அவர், கோலியுடன் இணைந்து 113 ரன்கள் குவித்து மிகச்சிறப்பான பார்ட்னர்சிப்பை அமைத்த்திருந்தார். முன்னதாக பந்துவீச்சிலும் மிரட்டி இருந்த பாண்டியா, மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
கோலியிடம் பாண்டியா நெகிழ்ச்சி
இந்நிலையில், ஹர்டிக் பாண்டியா, 'அந்த நேரத்தில் நான் உங்களுக்காக ஒரு புல்லட் அடி கூட வாங்கி இருப்பேன். ஆனால் நான் உங்களை ஆட்டமிழக்க விட்டிருக்க மாட்டேன்' என்று முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி குறித்து பேசியுள்ளார்.
நேற்றைய பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்திற்குப் பிறகு விராட் கோலியும் ஹர்டிக் பாண்டியாவும் உரையாடினர். அப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோவை பிசிசிஐ சமீபத்தில் அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஹர்டிக் பாண்டியா, "அந்த நேரத்தில் நான் உங்களுக்காக ஒரு புல்லட் அடி கூட வாங்கி இருப்பேன். ஆனால் நான் உங்களை ஆட்டமிழக்க விட்டிருக்க மாட்டேன். எனது இலக்கு எளிமையானது, உங்கள் ஆட்டத்தை எளிதாக்க நான் என்ன செய்ய முடியுமோ, அதைச் செய்வேன். நீங்கள் அதை பல முறை செய்திருக்கிறீர்கள். அழுத்தத்தைக் கையாள்வதில் உங்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் இல்லை." என்று கூறினார்.
ஹரிஸ் ரவுஃப் ஓவரில் அடித்த சிக்ஸர்களைப் பற்றி ஹர்திக் கோலியைப் பாராட்டினார். பின்னர் அது குறித்து அவர் பேசுகையில், "விராட் கோலி விளையாடிய அந்த இரண்டு ஷாட்களும் எவ்வளவு முக்கியமானவை என்று எனக்குத் தெரியும். நீங்கள் ஷாட்டைக் கூட தவறவிட்டாலும், அவை ஆட்டத்தில் முன்னேறிக்கொண்டிருக்கின்றன.
நான் நிறைய சிக்ஸர்கள் அடித்திருக்கிறேன், ஆனால் அந்த இரண்டு சிக்ஸர்களும் உண்மையிலேயே சிறப்பானவை. எங்கள் இருவருக்கும் என்ன அர்த்தம் என்று தெரியும். நாங்கள் உண்மையில் மிகவும் உந்தப்பட்டோம். அந்த இரண்டு ஷாட்களும், நான் இவ்வளவு கிரிக்கெட் விளையாடியுள்ளேன் என்று அவரிடம் கூறினேன். ஆனால் அந்த இரண்டு ஷாட்களையும் மிஸ்டர் கோலியைத் தவிர வேறு யாரும் விளையாடியிருக்க முடியாது என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
பாண்டியா அவர்களின் பார்ட்னர்ஷிப் குறித்து பேசுகையில், "ஆமாம், இன்றைய சிறந்த பகுதியில் நாங்கள் போராடினோம், ஆனால் நாங்கள் அதை ஒன்றாகச் செய்தோம். விதிவிலக்கான ஷாட்களை அடிப்பதன் மூலம் நாம் நடந்து சென்றிருந்தால், இந்த சிறப்பு இருந்திருக்காது. நாங்கள் போராடியதால் இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உணர்கிறது. எவ்வளவு சிரமம் என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்தோம். பாகிஸ்தானுக்கும் பெருமை, அவர்கள் நன்றாக பந்து வீசினார்கள். அவர்கள் அருமையாக இருந்தனர்,” என்று கூறினார்.
Of special knocks, game-changing sixes & thrilling victory at the MCG! 👌 💪
𝗦𝗽𝗲𝗰𝗶𝗮𝗹: Men of the moment - @imVkohli & @hardikpandya7 - chat after #TeamIndia beat Pakistan in the #T20WorldCup. 👏 👏 - By @RajalArora
Full interview 🎥 🔽 #INDvPAKhttps://t.co/3QKftWa7dk pic.twitter.com/sK7TyLFcSI— BCCI (@BCCI) October 24, 2022
ஊக்கம் கொடுத்து ஒருமுகப்படுத்தியது பாண்டியா - கோலி
போட்டிக்கு பிந்தைய சந்திப்பில் கோலி, பாண்டியா தான் தொடரவும், நம்பவும் சொன்னார் என்று கூறியிருந்தார். ரன் வேட்டையின் ஒரு முக்கியமான கட்டத்தில் அவரை அமைதிப்படுத்துவதில் பாண்டியா முக்கிய பங்கு வகித்ததை நினைவு கூர்ந்த கோஹ்லி, அந்த பார்ட்னர்ஷிப்பில் ஹர்திக் மிகவும் பயமின்றி இருந்தார். அவர் பேட்டிங்கிற்கு வந்ததும், அவர் உடனடியாக என்னிடம், ”பேசுவோம், பேசுவோம், பேசுவோம். ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்குவதன் மூலம் ஆழமாக பேட் செய்வார், எதுவும் நடக்கலாம்.' என்று கூறினார். அந்த நேரத்தில் அவர் என்னை ஒருமுகப்படுத்தினார். ஏனென்றால் நான் சில பெரிய ஷாட்களை அடிக்க விரும்பினேன்."
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.