Who will win today’s T20 World Cup match between IND vs SA? Tamil News
T20 World Cup 2022: India vs South Africa GROUP DECIDER on Sunday at 4:30PM, check Head to Head RECORD, changes in India Playing XI in tamil: 8-வது டி20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்தத் தொடருக்கான சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்திய அணி அதன் முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானையும், 2வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தையும் வீழ்த்தி, புள்ளி பட்டியலில் நான்கு புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.
Advertisment
இந்நிலையில், இந்திய அணி அதன் 3வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. நாளை (அக்டோபர் 30 ஆம் தேதி) மாலை 4:30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் பெர்த் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்தப் போட்டிக்காக ஏற்கனவே பெர்த் சென்றடைந்துள்ள இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
வெற்றி வாய்ப்பு யாருக்கு? அரையிறுதிக்கு தகுதி பெறும் முதல் அணி எது?
Advertisment
Advertisements
நடப்பு டி-20 உலகக் கோப்பையில் தென்ஆப்பிரிக்க அணி அதன் தொடக்க ஆட்டத்தில் ஜிம்பாப்வேவை எதிர்கொண்டது. மழையின் குறுக்கிட்டால் போட்டி ரத்து செய்யப்பட்டதால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இதன்பிறகு வங்க தேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா. அந்த ஆட்டத்தில் 7 பவுண்டரி 8 சிக்ஸர்களை பறக்கவிட்ட ரோசோவ் சதம் விளாசி 109 ரன்கள் குவித்தார். இதேபோல், தொடக்க வீரர் டி காக் 63 ரன்கள் எடுத்தார். ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்திலும் அதிரடி காட்டிய டி காக் 47 ரன்கள் எடுத்திருந்தார்.
மறுபுறம், இந்திய அணி அதன் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் த்ரில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதன்பிறகு நடந்த நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த தொடர் வெற்றிகளின் மூலம் இந்திய அணி சூப்பர் 12 சுற்றுக்கான குழு 2-ல் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்தப் பட்டியலில் தென்ஆப்பிரிக்க அணி 2வது இடத்தை பிடித்துள்ளது. முன்னதாக, இந்த சூப்பர் 12 சுற்றில் ஜிம்பாப்வேயிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்த நிலையில், அந்த அணிக்கான அரையிறுதி வாய்ப்பு குறைந்துவிட்டது. இதனால், நாளை நடக்கும் ஆட்டத்தில் வெற்றியை ருசிக்கும் அணி, இந்த குழுவில் இருந்து அரையிறுதிக்கு முதலாவது அணியாக தகுதி பெறும்.
போட்டி விவரங்கள்
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா (டி20 உலகக் கோப்பை 2022 - சூப்பர் 12 )
தேதி - நேரம்: ஞாயிறு, அக்டோபர் 30 மாலை 4:30 (இந்திய நேரப்படி)
பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையேயான ஆட்டம் நடைபெறுகிறது. அதிர்ஷ்டவசமாக, மழையால் ஆட்டம் தடைபட வாய்ப்பில்லை. 'போட்டியானது தெளிவான வானத்தில் குளிர்ந்த காற்றுடன் விளையாடப்படும்.' என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
IND vs SA: பெர்த் ஆடுகளம் எப்படி?
பெர்த் ஆடுகளம் மேற்பரப்பு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆரம்பத்தில் நிறைய உதவிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இன்னிங்ஸின் தொடக்கத்தில் ஹிட்டர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆட்டம் தொடரும்போது, பேட்டிங் மிகவும் எளிதாகிவிடும். எனவே, டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசவே நினைக்கும்.
டெலிகாஸ்ட் - லைவ் ஸ்ட்ரீமிங்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்