scorecardresearch

ஹாட்ரிக் வெற்றியை ருசிக்குமா இந்தியா.. தென் ஆப்பிரிக்காவுடன் மோதல்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டி மழையால் இரத்து செய்யப்பட்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா ஒரு புள்ளியை இழந்தது.

ஹாட்ரிக் வெற்றியை ருசிக்குமா இந்தியா.. தென் ஆப்பிரிக்காவுடன் மோதல்
இந்தியா, தென் ஆப்பிரிக்கா மோதல்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று தென் ஆப்பிரிக்கா அணியை இந்தியா எதிர்கொள்கிறது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகளுக்கு 3ஆவது சுற்று போட்டி அக்.30ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது

இந்த நிலையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் பெர்த்தில் நடைபெறும் இந்த போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.
பட்டியலில் இந்திய அணி பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகளை வீழ்த்தி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு வழக்கம்போல் அதிருஷ்டம் கை கொடுக்கவில்லை.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டி மழையால் இரத்து செய்யப்பட்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா ஒரு புள்ளியை இழந்தது. இந்திய அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரராக கே.எல். ராகுல் களம் இறங்குகிறார்.
இவர் முந்தைய இரண்டு போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 13 ரன்கள் மட்டுமே வீழ்த்தியுள்ளார்.

இதனால் இந்தப் போட்டியில் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest T20worldcup news download Indian Express Tamil App.

Web Title: India to face south africa in perth