India vs Australia Warm-Up Match highlights in tamil: 8 – வது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நேற்று முதல் (அக்டோபர் 16-ம் தேதி) ஆஸ்திரேலியாவில் தொடங்கியது. நவம்பர் 13 ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் களமாடியுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட உள்ளன.
இந்த தொடருக்கு முன்னதாக தகுதிச் சுற்றுப்போட்டிகளும், பயிற்சி ஆட்டங்களும் நடந்து வருகின்றன. அவ்வகையில், இந்திய அணிக்கு இரண்டு (ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக) அதிகாரபூர்வ பயிற்சி ஆட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது. பிரிஸ்பேனில் நடக்கும் இந்தப் போட்டி இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கியது.
இந்தியா vs ஆஸ்திரேலியா: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு; இந்தியா முதலில் பேட்டிங்
இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்ட நிலையில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
#ExpressSports | #SportsUpdate || டி-20 உலக கோப்பை: பிரிஸ்பேனில் நடக்கும் முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன.
— Indian Express Tamil (@IeTamil) October 17, 2022
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. https://t.co/gkgoZMqkWC | #T20WorldCup | #India | #Australia pic.twitter.com/dFHEE1cCQs
இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் – ரோகி சர்மா ஜோடி களமிறங்கினர். இதில் அதிரடியாக மட்டையை சுழற்றி வந்த ராகுல் பவுண்டரி மற்றும் சிக்சர்கள் விளாசி ரன்களை குவித்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 33 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விரட்டிய கேப்டன் ரோகித் 15 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 33 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
கோலி 19 ரன்னுக்கும், பாண்ட்யா 2 ரன்னுக்கும், தினேஷ் கார்த்திக் 20 ரன்னுக்கும், அவுட் ஆகினர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேன் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், மேக்ஸ்வெல், அகார் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்தியாவுக்கு திரில் வெற்றி
தொடர்ந்து, 187 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ் – கேப்டன் ஆரோன் பின்ச் ஜோடி களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இந்த ஜோஇடயில் மிட்செல் மார்ஷ் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு, வந்த வீரர்களில் ஸ்மித் 11 ரன்னுக்கும், மேக்ஸ்வெல் 23 ரன்னுக்கும், ஸ்டோய்னிஸ் 7 ரன்னுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
எனினும், நிலைத்து நின்று ஆடி வந்த கேப்டன் பின்ச் அரைசதம் அடித்தார். பின்னர் 79 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில், ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கடைசி ஓவரை இந்தியாவின் ஷமி வீசினார். அவரின் முதல் இரண்டு பந்துகளில் கம்மின்ஸ் 2 + 2 ரன்கள் எடுத்தார். 3வது பந்தில் கோலி வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
தொடர்ந்து ஷமி வீசிய 4வது பந்தில் அகர் ரன்-அவுட் செய்யப்பட்டார். 5வது பந்தை சந்தித்த ஜோஷ் இங்கிலிஸ் போல்ட் -அவுட் ஆனார். ஆட்டத்தின் கடைசி பந்தில் கேன் ரிச்சர்ட்சன் போல்ட்-அவுட் ஆனார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
பந்துவீச்சில் மிரட்டி எடுத்த இந்திய அணி தரப்பில் ஷமி 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுவிக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் பட்டேல், சஹால் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். அடுத்ததாக இந்திய அணி அதன் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

இரு அணி சார்பில் விளையாடும் வீரர்கள் பட்டியல்:
ஆஸ்திரேலிய அணி:
ஆரோன் பின்ச் (கேட்ச்), மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், ஜோஷ் இங்கிலிஸ் (வி.கே.), பாட் கம்மின்ஸ், ஆஷ்டன் அகர், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன்
இந்திய அணி
ரோஹித் சர்மா (கே), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (வி.கே), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, ரிஷப் பந்த், தீபக் ஹூடா.
ICC World Twenty20 Warm-up Matches, 2022Brisbane Cricket Ground (Woolloongabba), Brisbane 24 March 2023
Australia 180 (20.0)
India 186/7 (20.0)
Match Ended ( Day – Match 9 ) India beat Australia by 6 runs
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil