Advertisment

T20 World Cup: முடிவுக்கு வந்த தகுதி சுற்று… சூப்பர் 12-ல் இந்தியா மோதும் அணிகள் இவைதான்!

இலங்கை, நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய 4 அணிகள் அடுத்த சுற்றான சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India’s T20 WC Super 12 updated schedule in tamil

ICC T20 World Cup 2022 - indian cricket team Tamil News

T20 World Cup 2022: Super 12 - Full updated list of IND matches Tamil News: இந்திய அணி அதன் முதலாவது லீக் ஆட்டத்தில் கிரிக்கெட்டில் பரம எதிரியாக பாகிஸ்தானை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து சந்திக்கிறது.

Advertisment

முடிவுக்கு வந்த தகுதி சுற்று ஆட்டங்கள்

16 அணிகள் பங்கேற்கும் 8-வது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இம்மாதம் அக்டோபர் 16-ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கியது. இந்தத் தொடருக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் மொத்தம் 8 அணிகள் களம் கண்ட நிலையில், அவை குரூப் – ஏ, குரூப் – பி என இரு குழுக்களாக பிரிக்கப்பட்டன.

குரூப் – ஏ- வில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளும், குரூப் – பி-யில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகளும் இடம்பிடித்தன. ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அதன்படி, இந்த தகுதி சுற்றின் முடிவில் இலங்கை, நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் அடுத்த சுற்றான சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

publive-image

சூப்பர் 12 சுற்றில், அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, குரூப் 1ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து போன்ற அணிகளுடன் தகுதிச் சுற்றில் தகுதி பெற்ற அயர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் இடம்பிடித்துள்ளன. இதேபோல், குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளுடன் ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.

சூப்பர் 12 சுற்றின் போது, ​​ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு போட்டியில் விளையாடும். எனவே, ஒவ்வொரு அணியும் மொத்தம் 5 போட்டிகளில் விளையாடும். இந்த சுற்றின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் இறுதிப் போட்டியில் மோதுவார்கள்.

சூப்பர் 12-ல் இந்தியா மோதும் அணிகள்

சூப்பர் 12 சுற்று – இந்தியா vs பாகிஸ்தான்

அங்கும் முதல் போட்டி பாகிஸ்தானுடன்: டி 20 உலகக் கோப்பையில் இந்தியா மோதும் ஆட்டங்கள்

இந்த தொடருக்கான பிரதான சுற்றான சூப்பர் 12 சுற்று இன்று சனிக்கிழமை (அக்டோபர் 22 ஆம் தேதி) முதல் தொடங்குகிறது. சிட்னியில் நடக்கும் முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. நாளை ஞாயிற்றுகிழமை (அக்டோபர் 23 ஆம் தேதி) இந்திய அணி அதன் முதலாவது லீக் ஆட்டத்தில் கிரிக்கெட்டில் பரம எதிரியாக பாகிஸ்தானை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து சந்திக்கிறது.

சூப்பர் 12 சுற்று: இந்தியா vs நெதர்லாந்து

publive-image

வருகிற அக்டோபர் 27 ஆம் தேதி இந்திய அணி அதன் 2வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது (23வது போட்டி, சூப்பர் 12). இந்த போட்டி சிட்னியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் பிற்பகல் 12:30 மணிக்கு தொடங்கும்.

சூப்பர் 12 சுற்று: இந்தியா vs தென்னாப்பிரிக்கா

publive-image

வருகிற அக்டோபர் 30 ஆம் இந்திய அணி அதன் 3வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது (30வது போட்டி, சூப்பர் 12). இந்த போட்டியானது பெர்த் ஸ்டேடியத்தில் மாலை 4:30 மணிக்கும் தொடங்கும்.

சூப்பர் 12 சுற்று: இந்தியா vs பங்களாதேஷ்

publive-image

அடுத்த மாதம் நவம்பர் 2 ஆம் தேதி இந்திய அணி அதன் 4வது லீக் ஆட்டத்தில் வங்க தேச அணியுடன் மோதுகிறது (35வது போட்டி, சூப்பர் 12). இந்த போட்டி அடிலெய்டு நகரத்தில் உள்ள ஓவல் மைதானத்தில் பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்கும்.

சூப்பர் 12 சுற்று: இந்தியா vs ஜிம்பாப்வே

publive-image

அடுத்த மாதம் நவம்பர் 6 ஆம் இந்திய அணி அதன் 5வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது (42வது போட்டி, சூப்பர் 12). இந்தப்போட்டியானது மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்கும்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Sports Rohit Sharma Cricket Indian Cricket Team T20 Indian Cricket Worldcup India Vs Pakistan Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment