T20 World Cup 2022: Ireland vs England highlights in tamil: 8வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான சூப்பர் 12 சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மெல்போர்னில் இன்று நடந்த ஆட்டத்தில் குரூப்1 பிரிவில் உள்ள இங்கிலாந்து - அயர்லாந்து அணிகள் மோதின. அங்கு பெய்து வந்த மழையால் ஆட்டம் தொடங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் 45 நிமிட நேரம் தாமதமாக போட்டி தொடங்கியது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அந்த அணி 157 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அரைசதம் விளாசிய கேப்டன் பல் பிரீன் 62 ரன்களும், டக்கர் 34 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் மார்க்வுட், லிவ்விங்ஸ்டோன் தலா 3 விக்கெட்டும், சாம்கரண் 2 விக்கெட்டும் பென்ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டம் கைப்பற்றினர்.
We've been bowled out for 157. Now it's over to the bowlers.
SCORE: https://t.co/LUtLhuvQAq#IREvENG #BackingGreen #T20WorldCup ☘️🏏 pic.twitter.com/IwToWhH3UF— Cricket Ireland (@cricketireland) October 26, 2022
A stellar performance from the skipper with the bat. Let's back it up with the ball 👊#IREvENG #BackingGreen #T20WorldCup ☘️🏏 pic.twitter.com/GECQNmfjSb
— Cricket Ireland (@cricketireland) October 26, 2022
தொடர்ந்து 158 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியில், அந்த அணியின் கேப்டனும், தொடக்க வீரருமான பட்லர் முதல் ஓவரிலே பூஜ்ஜிய ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினார். பின்னர் வந்த அலெக்ஸ் 7, பென் ஸ்டோக்ஸ் 6, ப்ரோக் 18, மலான் 35 ரன்னில் வெளியேறினர். இதனால் இங்கிலாந்து அணி 13.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்கள் எடுத்தது.
இதன்பிறகு, மொய்ன் அலி மற்றும் லிவிங்ஸ்டன் ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக விளையாடிய மொய்ன் அலி 12 பந்தில் 24 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். அப்போது மழை குறுக்கிட்டது. இங்கிலாந்து அணி 14.3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்திருந்தது. டக் வொர்த் லீவிஸ் (டிஎல்எஸ்) முறைப்படி இங்கிலாந்து அணியினர் 5 ரன்கள் பின்தங்கி இதன் நிலையில், முன்னிலையில் இருந்த அயர்லாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
The rain has returned.
England are 105-5. The DLS par score as it stands is 110.
SCORE: https://t.co/LUtLhuvQAq#IREvENG #BackingGreen #T20WorldCup ☘️🏏 pic.twitter.com/LbvrF6L5Jm— Cricket Ireland (@cricketireland) October 26, 2022
அயர்லாந்து அணி தரப்பில் ஜோசுவா லிட்டில் 2 விக்கெட்டுகளையும், பாரி மெக்கார்த்தி, ஃபியோன் ஹண்ட் மற்றும் ஜார்ஜ் டோக்ரெல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
For a loud group of people in Melbourne, the night is young.#IREvENG #T20WorldCup #BackingGreen ☘️🏏 pic.twitter.com/k6ACupegfg
— Cricket Ireland (@cricketireland) October 26, 2022
AN HISTORIC WIN FOR IRELAND 🙌#T20WorldCup | #IREvENG pic.twitter.com/QvLpQYRpSL
— ICC (@ICC) October 26, 2022
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.