T20 World Cup - West Indies vs Ireland Tamil News:16 அணிகள் பங்கேற்கும் 8வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 16 அணிகளில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக தகுதி சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்த தகுதிச்சுற்று போட்டியில் குரூப் பி பிரிவில் இடப்பிடித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து அணிகள் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக இறுதி வரை அவுட்டாகாமல் இருந்த பிராண்டன் கிங் அரைசதம் விளாசி 62 ரன்கள் எடுத்தார். அயர்லாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக டெலானி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து 147 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய அயர்லாந்து அணி, 17.3 ஓவர்களிலே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டிபிடித்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர் ஆண்டி பால்பிர்னி 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களத்தில் இருந்த பால் ஸ்டிர்லிங் (66), லோர்கன் டக்கர் (45) அணியின் வெற்றியை உறுதி செய்தது. இதனால், 1 விக்கெட் மட்டும் இழந்த அயர்லாந்து அணி 152 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த அசத்தல் வெற்றி மூலம் அயர்லாந்து அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி நடப்பு டி20 உலககோப்பையிலிருந்து வெளியேறியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil