மீண்டும் ஏமாற்றிய கே.எல் ராகுல்: டாப் அணிகளுக்கு எதிராக மோசமான ரன்கள்
ராகுல் 5 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 5 ரன்கள் மட்டும் எடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால்,மிகவும் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கினர்.
ராகுல் 5 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 5 ரன்கள் மட்டும் எடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால்,மிகவும் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கினர்.
T20 World Cup: KL Rahul against top eight ranked teams Tamil News
T20 World Cup - KL Rahul Tamil News: 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரின் முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் இன்று அடிலெய்டு ஓவலில் அரங்கேறும் 2-வது அரைஇறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
Advertisment
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்ற நிலையில், அந்த அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா - கே.எல் ராகுல் ஜோடி களமிறங்கினர். இந்த அணிக்கு வலுவான தொடக்க கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு பவுண்டரியை மட்டும் விரட்டிய ராகுல் 1.4வது வோக்ஸ் வீசிய பவுன்சர் பந்தில் விக்கெட் கீப்பர் பட்லர் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ராகுல் 5 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 5 ரன்கள் மட்டும் எடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால்,மிகவும் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கினர்.
டி20 உலகக் கோப்பையில் முதல் எட்டு அணிகளுக்கு எதிராக கேஎல் ராகுலின் ரன் குவிப்பு பின்வருமாறு:-
Advertisment
Advertisements
3(8) vs பாகிஸ்தான் - துபாய் - 2021 18(16) vs நியூசிலாந்து - துபாய் - 2021 4(8) vs பாகிஸ்தான் - மெல்போர்ன் - 2022 9(14) vs தென் ஆப்ரிக்கா பெர்த் - 2022 5(5) vs இங்கிலாந்து - அடிலெய்டு - 2022