மீண்டும் ஏமாற்றிய கே.எல் ராகுல்: டாப் அணிகளுக்கு எதிராக மோசமான ரன்கள்

ராகுல் 5 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 5 ரன்கள் மட்டும் எடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால்,மிகவும் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கினர்.

KL Rahul in T20 WC vs top eight ranked teams in tamil
T20 World Cup: KL Rahul against top eight ranked teams Tamil News

T20 World Cup – KL Rahul Tamil News: 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரின் முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் இன்று அடிலெய்டு ஓவலில் அரங்கேறும் 2-வது அரைஇறுதியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்ற நிலையில், அந்த அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா – கே.எல் ராகுல் ஜோடி களமிறங்கினர். இந்த அணிக்கு வலுவான தொடக்க கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு பவுண்டரியை மட்டும் விரட்டிய ராகுல் 1.4வது வோக்ஸ் வீசிய பவுன்சர் பந்தில் விக்கெட் கீப்பர் பட்லர் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ராகுல் 5 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 5 ரன்கள் மட்டும் எடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால்,மிகவும் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கினர்.

டி20 உலகக் கோப்பையில் முதல் எட்டு அணிகளுக்கு எதிராக கேஎல் ராகுலின் ரன் குவிப்பு பின்வருமாறு:-

3(8) vs பாகிஸ்தான் – துபாய் – 2021
18(16) vs நியூசிலாந்து – துபாய் – 2021
4(8) vs பாகிஸ்தான் – மெல்போர்ன் – 2022
9(14) vs தென் ஆப்ரிக்கா பெர்த் – 2022
5(5) vs இங்கிலாந்து – அடிலெய்டு – 2022

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest T20worldcup news download Indian Express Tamil App.

Web Title: Kl rahul in t20 wc vs top eight ranked teams in tamil

Exit mobile version