Advertisment

IND vs BAN: இலங்கை வீரரை முந்திய கோலி... டி20 உலகக் கோப்பையில் புதிய சாதனை!

டி20 உலகக் கோப்பையில், இலங்கை வீரர் மஹேல ஜெயவர்த்தனேவின் சாதனையை முறியடித்துள்ள விராட் கோலி புதிய சாதனையை படைத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Kohli becomes the highest run-scorer in men's T20 World Cups Tamil News

India batter virat Kohli breaks Mahela Jayawardene's record of 1016 runs Tamil News

T20 World Cup: virat Kohli Tamil News: 8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடருக்கான சூப்பர் 12 சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இந்தியா – வங்க தேச அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் இன்று புதன் கிழமை (நவம்பர் 2 ஆம் தேதி) அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது.

Advertisment

இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில், டாஸ் வென்ற வங்க தேச அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

டி20 உலகக் கோப்பையில் கோலி புதிய சாதனை

publive-image

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 15 ரன்கள் எடுத்ததன் மூலம் டி20 உலகக் கோப்பையில், புதிய சாதனையைப் படைத்துள்ளார். அந்த சாதனை என்னவென்றால், கடந்த 2014 ஆம் ஆண்டு இலங்கை வீரர் மஹேல ஜெயவர்த்தனே 1016 ரன்கள் எடுத்து டி20 உலகக் கோப்பையில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். தற்போது விராட் கோலி 1017 ரன்களுக்கு மேல் எடுத்து, ஜெயவர்த்தனேவின் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார்.

விராட் கோலி தனது 5வது டி20 உலகக் கோப்பையில் விளையாடிய வரும் கோலி, தனது 23 இன்னிங்சில் 12 அரைசதங்கள் அடித்து போட்டியின் அதிக ரன்களை எடுத்தவராக உள்ளார். ஜெயவர்த்தனேவின் சாதனையுடன் ஒப்பிடுகையில், கோலி இந்த சாதனையை குறைவான பந்துகளில் (754 பந்துகள்) பதிவு செய்துள்ளார்.

கோலி 2012ல் தனது முதல் டி20 உலகக் கோப்பையில் 185 ரன்கள் எடுத்தார். அவர் 2014ல் போட்டியின் அதிக ரன்களை குவித்தவராக இருந்தார். 2016ல் இரண்டாவது அதிக ரன்கள் எடுத்தவர் ஆனார். 2014 மற்றும் 2016 பதிப்புகளில் தொடரின் ஆட்டநாயகனாக கோலி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இரண்டு முறை விருதை வென்ற ஒரே வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

publive-image

நடப்பு டி20 உலகக் கோப்பையை கோலி 845 ரன்களில் தொடங்கினார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 12 ரன்களில் ஆட்டமிழக்க முன், பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக இரண்டு ஆட்டமிழக்காத அரைசதங்களை அடித்தார். அந்த அதிரடி ஆட்டம் அவரை திலகரத்ன தில்ஷன் (897), ரோஹித் ஷர்மா (904) மற்றும் கிறிஸ் கெய்ல் (965) ஆகியோரைக் கடந்து டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு அழைத்துச் சென்றது. அதன்பின்னர் அவர் வங்க தேசத்துக்கு எதிரான ஆட்டத்தின் போது ஜெயவர்த்தனேவை முந்தினார். .

publive-image

தற்போது கோலி அனைத்து டி20 சர்வதேசப் போட்டிகளிலும் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையையும் பெற்றுள்ளார். மேலும் பட்டியலில் ரோஹித், மார்ட்டின் கப்டில், பாபர் அசம் மற்றும் பால் ஸ்டிர்லிங் ஆகியோரையும் முந்தியுள்ளார். கோலி டி20 போட்டிகளில் 4000 ரன்கள் மைல்கல்லை நெருங்கி வருகிறார். மேலும் சராசரியாக 140 ஸ்டிரைக் ரேட்டுடன் 50க்கு மேல் அவர் எடுத்துள்ளார்.

publive-image

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Cricket Sports India Vs Bangladesh T20 Virat Kohli Worldcup Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment