Advertisment

நோ பால்… நடுவருக்கு அழுத்தம் கொடுத்தாரா கோலி? பாகிஸ்தான் பிரபலங்கள் மாறுபட்ட கருத்து

கோலி நடுவரிடம் நோ பால் கேட்ட விவகாரத்தில், பாகிஸ்தான் ஜாம்பவான்களான வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் மற்றும் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் ஆகியோர் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Kohli’s no ball gesture to umpire vs BAN: Pak legends split opinions Tamil News

India's Virat Kohli and Bangladesh's Shakib Al, left, gestures as they talk with umpire Hasan Marais Erasmus during the T20 World Cup cricket match between India and Bangladesh in Adelaide, Australia, Wednesday, Nov. 2, 2022. (AP Photo/James Elsby)

India vs Bangladesh - T20 World Cup 2022 -  Virat Kohli Tamil News: 8வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலிய மண்ணில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - வங்க தேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்க தேச அணி பீல்டிங்கைத் தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் தொடக்க வீரர் ராகுல் (50), கோலி (62), மற்றும் சூர்யகுமார் (30) ஆகிய வீரர்கள் அதிரடியாக விளையாடினர்.

Advertisment

தொடர்ந்து 185 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய வங்க தேச அணி 7 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் தொடங்கிய ஆட்டத்தில் டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி, வங்கதேச அணிக்கு 16 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், வங்கதேச அணியால் 16 ஓவர்கள் முடிவில் 145 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால், டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

publive-image

நோ பால்… நடுவருக்கு அழுத்தம் கொடுத்தாரா கோலி?

இந்நிலையில், இந்த போட்டியில் விராட் கோலி மற்றும் வங்க தேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஆகியோருக்கு இடையே நடந்த விவாதம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

publive-image

இந்திய அணி பேட்டிங் செய்த இன்னிங்சில் 16வது ஓவரின் போது வங்க தேச வீரர் ஹசன் மகமுத் 2வது முறையாக பவுன்சர் பந்தை வீசினார். கிரிக்கெட் விதிகளின்படி ஒரு ஒவருக்கு ஒரு பவுன்சர் மட்டும் தான் அனுமதிக்கப்படும். 2வது முறை வீசினால் அதற்கு நோ பால் அறிவிக்கப்பட்டு, ஃபிரி ஹிட் வழங்கப்படும். அதன்படி, ஹசன் மகமுத் 2வது முறையாக பவுன்சர் வீசியதால், விராட் கோலி நடுவரிடம் நோ பால் கேட்டார். இதற்கு கள நடுவர்கள் நோ பால் வழங்கி ஃபிரி ஹிட் கொடுத்தனர்.

விராட் கோலி கேட்ட பிறகு ஃபிரி ஹிட் கொடுக்கப்பட்டதாக கருதி அதிருப்தி அடைந்த வங்கதேச கேப்டன் ஷகிப் நடுவர்களிடம் முறையிட சென்றார். ஷகிப் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட போது அவர் அருகே வந்த கோலி அவருடன் சில நொடிகள் விவாதம் நடத்தினார். பின்னர் கோலி, சாகிப் தோள் மீது கை போட்டு புன்னகையுடன் எதோ கூற, இருவரும் சிரித்து கொண்டு முதுகில் தட்டி கொடுத்து சென்றனர். இந்த வீடியோ தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான் பிரபலங்கள் மாறுபட்ட கருத்து

முன்னதாக, நடப்பு உலககோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி நடுவர் எராஸ்மசிடம் நோ பால் கேட்ட பின் அதற்கு அவர் நோ பால் வழங்கினார். இதில் தவறு ஏதும் இல்லை என்றாலும் பாகிஸ்தான் ரசிகர்கள் அதனை சர்ச்சை ஆக்கினர். தற்போது அதே போல ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், இது குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் ஜாம்பவான்களான வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் மற்றும் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் ஆகியோர் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பேசிய சோயப் மாலிக், "நீங்கள் சைகை செய்ததால்தான் ஷாகிப் அல் ஹசன் அவ்வாறு கூறியிருக்கலாம். அதனால்தான் நடுவர் நோ பால் கொடுத்தார்" என்றுள்ளார்.

“நீங்கள் உங்கள் பேட்டிங்கைச் செய்யுங்கள், நடுவர்கள் அவர்கள் வேலையைச் செய்யட்டும் என்று ஷகிப் கூறுகிறார். நாம் சொன்னதையே அவரும் சொல்கிறார். நீங்கள் எதையாவது அழைக்கப் போகிறீர்கள் என்றால், நீங்கள் அம்பயருக்கு அழுத்தம் கொடுக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம். நிச்சயமாக அவர் ஒரு பெரிய பெயர் (கோலி). அதனால் சில சமயங்களில் நடுவர்கள் அழுத்தத்தில் இருப்பார்கள்." என்று வக்கார் யூனிஸ் கூறியுள்ளார்.

இருப்பினும், வாசிம் அக்ரம், “பேட்ஸ்மேனுக்கு இது ஒரு இயல்பான விஷயம் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் வைட் பார்த்தால், அவர்கள் எப்படியும் நடுவரிடம் சைகை செய்கிறார்கள். இன்றைய சட்டங்கள் எனக்குத் தெரியாது. அதை தற்போதைய வீரர்கள் நம்மிடம் சொல்லலாம்." என்று மாறுபட்ட கூறியுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Viral Virat Kohli Sports Cricket T20 Worldcup Viral Video India Vs Bangladesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment