Australia vs India warm-pu match; Mohammed Shami Tamil News: 8 – வது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நேற்று முதல் (அக்டோபர் 16-ம் தேதி) ஆஸ்திரேலியாவில் தொடங்கியது. நவம்பர் 13 ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் களமாடியுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட உள்ளன.
இந்த தொடருக்கு முன்னதாக தகுதிச் சுற்றுப்போட்டிகளும், பயிற்சி ஆட்டங்களும் நடந்து வருகின்றன. அவ்வகையில், இந்திய அணிக்கு இரண்டு (ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக) அதிகாரபூர்வ பயிற்சி ஆட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது. பிரிஸ்பேனில் நடக்கும் இந்தப் போட்டி இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கியது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அரைசதம் விலகிய தொடக்க வீரர் ராகுல் 57 ரன்களும், சூர்யகுமார் 50 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேன் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், மேக்ஸ்வெல், அகார் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து, 187 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 180 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. பந்துவீச்சில் மிரட்டி எடுத்த இந்திய அணி தரப்பில் ஷமி 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுவிக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் பட்டேல், சஹால் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகள்: யார்க்கர்களை வீசி டெத் பவுலிங்கில் மிரட்டிய ஷமி
இந்த ஆட்டத்தில் நிலைத்து நின்று விளையாடி வந்த ஆஸ்திரேலிய அணியின் வந்த கேப்டன் பின்ச் அரைசதம் அடித்தார். பின்னர் 79 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில், ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கடைசி ஓவரை இந்தியாவின் ஷமி வீசினார். அவரின் முதல் இரண்டு பந்துகளில் கம்மின்ஸ் 2 + 2 ரன்கள் எடுத்தார். 3வது பந்தில் கோலி வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
தொடர்ந்து ஷமி வீசிய 4வது பந்தில் அகர் ரன்-அவுட் செய்யப்பட்டார். 5வது பந்தை சந்தித்த ஜோஷ் இங்கிலிஸ் போல்ட் -அவுட் ஆனார். ஆட்டத்தின் கடைசி பந்தில் கேன் ரிச்சர்ட்சன் போல்ட்-அவுட் ஆனார். கடைசி ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவை இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றியைப் பெற்றது.
இந்திய அணி தரப்பில் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி கடைசி ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அந்த ஓவரில் முதல் இரண்டு பந்துகளை யார்க்கர்களாக வீசிய நிலையில், அதை கம்மின்ஸ் 2 ரன்கள் எடுத்தார். ஆனால், ஷமி கடைசியாக வீசிய 2 துல்லியமான யார்க்கர்கள் போல்டை பதம் பார்த்தது. அவரது இந்த மிரட்டல் பந்துவீச்சு இந்திய அணி வெற்றியை ருசிக்க உதவியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil