scorecardresearch

AUS vs NZ: அதிரடி காட்டிய கான்வே… ஆஸி.,-யை வீழ்த்திய நியூசிலாந்துக்கு அபார வெற்றி!

டி-20 உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட நியூசிலாந்தது 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Australia vs New Zealand match highlights in tamil
Australia vs New Zealand match highlights in tamil

Australia vs New Zealand (AUS vs NZ) match highlights in tamil: டி-20 உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்று ஆட்டங்கள் இன்று முதல் தொடங்குகிறது. அதன்படி, சிட்னி மைதானத்தில் அரங்கேறும் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனால், நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

நியூசிலாந்து பேட்டிங்

நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக டேவான் கான்வே – பின் ஆலன் ஜோடி களமிறங்கினார்.தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி இந்த ஜோடி ரன்களை குவித்தனர். குறிப்பாக, தொடக்க வீரர் பின் ஆலன் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். தனக்கு வீசப்பட்ட பந்துகளை மைதானத்தின் மூலை முடுக்கெல்லாம் பவுண்டரி, சிக்ஸர் என பறக்கவிட்டார்.

இதனால் நியூசிலாந்து அணியின் ரன் ரேட் அதிரடியாக உயர்ந்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஆலன் 43 ரன்கள் எடுத்த நிலையில் ஹேசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கினார். மறுபுறம் அதிரடியை தொடங்கிய கான்வே விளையாடி அரைசதம் விளாசினார். வில்லியம்சன் 23 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் வந்த கிளென் பிலிப்ஸ் 13 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.

ஒரு முனையில் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுமுனையில் கான்வே தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வந்தார். அவருடன் பார்ட்னார்ஷிப்பில் இருந்த நீசம் கடைசி நேரத்தில் சிக்ஸர்களை பறக்க விட்டார். இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது. கான்வே 92 ரன்களுடன், ஜிம்மி நீஷம் 26 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

ஆஸ்திரேலியா பேட்டிங்

தொடர்ந்து 201 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை ஆஸ்திரேலிய அணி துரத்திய நிலையில், அந்த அணியில். தொடக்க வீரராக களமாடிய வார்னர் 5 ரன்னிலும், கேப்டன் ஆரோன் பின்ச் 13 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து மிட்சேல் மார்ஷ் 16 ரன்களிலும், ஸ்டோனிஸ் 7 ரன்களிலும், டிம் டேவிட் 11 ரன்களிலும் அவுட் ஆகினர்.

மிடில்-ஆடரில் களமாடிய மேக்ஸ்வெல் தவிர மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். சிறிது நம்பிக்கை கொடுத்த மேக்ஸ்வெல் 28 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த ஆஸ்திரேலியா 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், ஆஸ்திரேலிய அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து அணி அதன் முதல் வெற்றியை ருசித்துள்ளது.

இரு அணிகளின் ஆடும் லெவன் பட்டியல்:

நியூசிலாந்து:

டெவோன் கான்வே (விக்கெட் கீப்பர்), ஃபின் ஆலன், கேன் வில்லியம்சன் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, இஷ் சோதி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்

ஆஸ்திரேலியா:

ஆரோன் பின்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

ICC Men's T20 World Cup, Australia, 2022Sydney Cricket Ground (SCG), Sydney   29 May 2023

Australia 111 (17.1)

vs

New Zealand   200/3 (20.0)

Match Ended ( Day – Super 12 – Match 1 ) New Zealand beat Australia by 89 runs

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest T20worldcup news download Indian Express Tamil App.

Web Title: Nz vs aus live score updates in tamil

Best of Express