Pakistan vs England, Final – melbourne forecast sunday Tamil News: 8-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரின் முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் இன்று அடிலெய்டு ஓவலில் அரங்கேறிய 2-வது அரைஇறுதியில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம், இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த ஆட்டம் வருகிற ஞாயிற்று கிழமை (நவம்பர் 13 ஆம் தேதி) மெல்போர்னில் அரங்கேறுகிறது.
மெல்போர்னில் 95% மழைக்கு வாய்ப்பு
இந்நிலையில், பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தும் மெல்போர்னில் 95 சதவீதம் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. “வருகிற ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் 95 சதவீதம் (8 முதல் 20 மிமீ) மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்று மெல்போர்ன் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், லீக் மற்றும் நாக்-அவுட் ஆட்டங்களைப் போலல்லாமல், இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு ஒரு ரிசர்வ் நாள் உள்ளது. அதன்படி, ஞாயிற்று கிழமை போட்டி நடந்த சாத்தியமில்லை என்றால், இந்திய நேரப்படி திங்கள்கிழமை மதியம் 3 மணிக்கு (காலை 9:30 மணி IST) இறுதிப் போட்டியை நடத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மழை குறுக்கிட்டால், இறுதிப் போட்டியை முடிக்க இரண்டு கூடுதல் மணிநேரமும் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், திங்கள்கிழமையும் (நவம்பர் 14) கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. போட்டி ஒருவேளை கைவிடப்பட்டால், இரு அணிகளும் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு, பரிசுத்தொகை பிரித்து வழங்கப்படும். மேலும்
“திட்டமிட்ட நாளில் போட்டியை முடிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும், ஒரு போட்டியை நடத்துவதற்கு தேவையான குறைந்தபட்ச ஓவர்களை திட்டமிட்ட நாளில் வீச முடியாவிட்டால் மட்டுமே, ரிசர்வ் நாளில் போட்டி முடிக்கப்படும்.” என்று டி-20 உலகக் கோப்பை விளையாடும் நிலைமைகள் கூறுகின்றன.
நடப்பு டி20 உலகக் கோப்பையில், ஏற்கனவே நடந்த மூன்று போட்டிகள் கனமழையால் கைவிடப்பட்து. மற்றொரு ஆட்டத்தில் மழை குறுக்கிட்ட நிலையில், அந்த ஆட்டத்தில் அயர்லாந்து அணி இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil