Pakistan vs South Africa Live Score, T20 World Cup 2022 in tamil: 8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்தத் தொடருக்கான சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா: இரு அணிகளின் ஆடும் லெவன்
பாகிஸ்தான்:
முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), ஷான் மசூத், முகமது ஹாரிஸ், ஷதாப் கான், இப்திகார் அகமது, முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா, ஷாஹீன் அப்ரிடி
தென் ஆப்பிரிக்கா
டெம்பா பவுமா (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், ரிலே ரோசோவ், வெய்ன் பார்னெல், ஐடன் மார்க்ரம், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, லுங்கி என்கிடி, தப்ரைஸ் ஷம்சி
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. இதனால், தென்ஆப்பிரிக்கா அணிக்கு 186 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பாபர் 6 ரன்னிலும், ரிஸ்வான் 4 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பிறகு வந்த முகமது ஹாரிஸ் 28 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். இதனால், ரன் குவிக்க தடுமாறி வந்த பாகிஸ்தான் அணியை இப்திகார்- ஷதாப் கான் ஜோடி சரிவில் இருந்து மீட்டது.
இந்த ஜோடியில் இப்திகார் அரைசதம் கடந்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடன் மறுமுனையில் அதிரடி காட்டிய ஷதாப் கான் 20 பந்துகளில் அரைசதம் கடந்தார். அவர் 22 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக நோர்க்கியா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Pakistan have set South Africa a target of 186 💪
Who is winning this?#T20WorldCup | #PAKvSA | 📝: https://t.co/kNNAHOmH9p pic.twitter.com/AClAtEQ7PH— T20 World Cup (@T20WorldCup) November 3, 2022
தற்போது, 186 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணி 9 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கிபோது 14 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணிக்கு 142 ரன்கள் இலக்கு நிர்ணையிக்கப்பட்டது
இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் 14 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பவுமா 36 ரன்களும் மார்க்ரம் 20 ரன்களும், ஸ்டபஸ் 18 ரன்களும், கலசன் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.