Advertisment

அதீத முன் எச்சரிக்கை… ரோகித் - ராகுல் தொடக்க ஜோடி தோல்விக்கு இதுதான் காரணமா?

சோயிப் அக்தர், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ராகுல் மற்றும் ரோஹித் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கத் தவறியதற்காக விமர்சித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Pakistan legend Shoaib Akhtar on India openers Rohit Sharma, KL Rahul Tamil News

Former Pakistani fast bowler Shoaib Akhtar was critical of India's openers KL Rahul and Rohit Sharma Tamil News

IND vs PAK: Rohit Sharma -  KL Rahul - Shoaib Akhtar Tamil News: 8வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான சூப்பர் 12 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 160 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்த இந்திய அணி களமிறங்கியது.

Advertisment

இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா - ராகுல் ஜோடி களமிறங்கினர். அணிக்கு வலுவான தொடக்கத்தை இந்த ஜோடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கே.எல். ராகுல் 4 ரன்னிலும், கேப்டன் ராகுல் 4 ரன்னிலும், அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அப்போது இந்தியா 3.2 ஓவர்களில் 10-2 என்ற நிலையில் தத்தளித்தது.

publive-image

இந்திய அணியின் திணறலை மிடில் - ஆடர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் தடுப்பார் என்று ரசிகர்கள் ஆவல் கொண்ட நிலையில், அவர் 15 ரன்கள் எடுத்த நிலையிலும், பின்னர் வந்த அக்சர் 2 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால், இந்திய அணி 6.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்து திணறியது.

எனினும், களத்தில் இருந்த விராட் கோலி - ஹர்திக் பாண்டியா ஜோடி மிகச்சிறப்பான பார்ட்னெர்ஷிப்பை அமைத்து 113 ரன்கள் குவித்தனர். இந்த ஜோடியின் அபார ஆட்டம் இந்திய அணி வெற்றி இலக்கிற்கான ஸ்கோரை எட்ட உதவியது. இதன்பின்னர், கோலியுடன் ஜோடி அமைத்த அஸ்வின் அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் இந்திய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சோயிப் அக்தர் கருத்து

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ராகுல் மற்றும் ரோஹித் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கத் தவறியதற்காக விமர்சித்துள்ளார். மேலும், போட்டியின் போது இருவருக்கும் அதீத முன் எச்சரிக்கை வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

publive-image

அக்தர் தனது யூடியூப் சேனலில், "இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் பயப்படுகிறார்கள். கேப்டனாக ரோஹித் அமைதியாக இருக்க வேண்டும். அவரது பேட்டிங் அதன் சுமையைத் தாங்கிக்கொண்டிருக்கிறது. ராகுல் தனது கூடுதல் கவனம் செலுத்தும் அணுகுமுறையால் சிக்கிக் கொள்கிறார், அவர் அவ்வாறு செய்யக்கூடாது." என்று கூறியுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Cricket Rohit Sharma Sports Shoaib Akhtar T20 India Vs Pakistan Kl Rahul Worldcup Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment