Rohit Sharma injured | Rohit injured his right elbow during practice | ரோஹித்சர்மாகாயம் | பயிற்சியின் போது ரோகித்தின் வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது.
8-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதின. அதன்படி, குரூப் 1ல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2ல் இருந்து பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இதில் சிட்னியில் நாளை (புதன்கிழமை) நடக்கும் முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. மற்றொரு அரைஇறுதியில் இந்திய அணி, இங்கிலாந்தை நாளை மறுதினம் அடிலெய்டில் எதிர்கொள்கிறது. இந்த அரையிறுதி போட்டிக்கு தயாராவதற்கு இந்திய அணி வீரர்கள் அடிலெய்டில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரோகித் சர்மா திடீர் காயம்: பயிற்சியில் நடந்தது என்ன?
இந்நிலையில், வலைப் பயிற்சியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது.
அடிலெய்டு ஓவல் மைதானத்தில் அணியின் த்ரோ டவுன் நிபுணரான எஸ் ரகுவை எதிர்கொண்ட ரோகித் வழக்கமான பேட்டிங் பயிற்சிகளை மேற்கொண்டார். அவர் ஒரு புல் ஷாட்டை முயற்சித்து, பந்தை தவறவிட்ட நிலையில் பந்து அவரது கையை பதம் பார்த்தது. ரோகித்தும் பந்து பட்ட உடனே வலியால் துடித்தார். பின்னர், உடனடியாக அமர்வை விட்டு வெளியேறினார்.
அவரது வலது கையில் ஒரு பெரிய ஐஸ் பேக் கட்டப்பட்டிருந்தது. அவர் ஒரு ஐஸ் பெட்டியில் அமர்ந்து, தூரத்திலிருந்து பயிற்சி அமர்வைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, வெறிச்சோடியவராகவும், கணிசமான வலியுடனும் காணப்பட்டார். அவருடன் மென்டல் கண்டிஷனிங் பயிற்சியாளர் பேடி அப்டன் கணிசமான நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
ஐஸ் பேக்கை தடவி சிறிது ஓய்வு எடுத்த பிறகு, ரோகித் தனது பயிற்சியை மீண்டும் தொடங்கினார். ஆனால் அவரது அசைவுகள் சரியாக இருக்கிறதா என்று சோதிக்க அவர் பெரும்பாலும் டிஃபன்ஸ் ஷாட்களை விளையாடியதால், த்ரோடவுன் நிபுணர்கள் முழு த்ரோட்டில் செல்ல வேண்டாம் என்று கூறினார்.
இந்த அமர்வுக்குப் பிறகு இந்திய மருத்துவக் குழு அவரை மதிப்பீடு செய்யும் என்பதால் காயத்தின் அளவை அறிய முடியவில்லை. ஆனாலும், கேப்டன் ரோகித்துக்கு ஏற்பட்ட காயம் அரையிறுதி போட்டியில் விளையாட பாதிப்பை ஏற்படுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING:
Good news for the Indian fans, as the skipper walks back to the nets!@debasissen @BoriaMajumdar @sharmisthagoop2 @amitshah22 #BreakingNews #RohitSharma𓃵 #TeamIndia #T20WorldCup pic.twitter.com/7em9p5Inhh— RevSportz (@RevSportz) November 8, 2022
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.