T20 worldcup - IND vs PAK - Sachin Tendulkar Tamil News: 16 அணிகள் பங்கேற்கும் 8வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நேற்று முன் தினம் (அக்டோபர் 16 ஆம் தேதி) முதல் தொடங்கியது. நவம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தத் தொடரில், 16 அணிகளில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட உள்ளன. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக தகுதி சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்தியா vs பாகிஸ்தான்
இந்த தொடருக்காக இந்திய அணி 10 நாடுகளுக்கு முன்னதாகவே ஆஸ்திரேலியா சென்றுள்ளது. அங்கு உள்ளூர் அணிகளுடன் பயற்சி ஆட்டத்தில் விளையாடியது. தொடர்ந்து ஆஸ்திரேலியா உடனான அதிகாரபூர்வ பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்பிறகு இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆட்டத்தில் விளையாட உள்ளது.
இந்த பயிற்சி ஆட்டங்கள் முடிந்த பின்னர், இந்திய கிரிக்கெட் அணி அதன் முதலாவது லீக் ஆட்டத்தில், கிரிக்கெட் பரம எதிரான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியானது வருகிற 23 ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அரங்கேறுகிறது. இந்தப்போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்ட நிலையில், போட்டிக்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
சச்சின் டெண்டுல்கர் அறிவுரை
இந்நிலையில், இந்திய ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர், மைதானங்களின் பவுண்டரிகள் எல்லைகள் பெரியதாக இருந்தால், அங்கு அணியின் ஃபீல்டிங் மிக முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.
"இது உண்மையில் அதே அணி. அதிகம் மாறவில்லை என்று நினைக்கிறேன். பவுண்டரியின் எல்லைக் கோடுகள் மிக நீளமாக இருந்தால் பீல்டிங் முக்கியமானதாக இருக்கும். அவர்கள் எல்லைக் கோடுகளை அதிகமாக்கும் பட்சத்தில் அது இந்தியாவைப் போல இருக்கும். பெரிய எல்லைகளில், வீசுதல் (த்ரோ அடிப்பது) முக்கியமானது. அது ஒரு சில ரன்-அவுட் வாய்ப்புகளை உருவாக்கலாம்.
சுழன்று வரும் பந்துகளுக்கு எதிராக நீங்கள் அவை சுழன்று திரும்பும் திசையில் தான் அதிகமாக விளையாடுகிறீர்கள், மேலும் சில பேட்டர்கள் மட்டுமே திருப்பத்திற்கு எதிராக தொடர்ந்து அடிக்கிறார்கள். பொதுவாக, கேப்டன்கள் பவுண்டரி எல்லைப் பரிமாணங்களைப் பார்த்து, எந்த பந்து வீச்சாளர் (ஆஃப்-ஸ்பின்னர்/லெக் ஸ்பின்னர் அல்லது இடது கை சுழற்பந்து வீச்சாளர்) விளையாட வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள். ஒரு சுழற்பந்து வீச்சாளரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் காற்று வீசும் திசையையும் நீங்கள் பார்க்க வேண்டும்.
இது பந்துவீச்சு நுட்பம் மற்றும் விருப்பமான தாக்குதல் பகுதிகளையும் சார்ந்துள்ளது. அது ஆஃப்-ஸ்டம்புக்கு வெளியே அதிகமாக இருந்தாலும் அல்லது அடித்தவரின் உடலுக்கு நெருக்கமாக இருந்தாலும் சரி. நீங்கள் ஒரு ஆஃப்-ஸ்பின்னரைத் தேர்வுசெய்தால், அவரின் என்டில் இருந்து தான் அறிமுகப்படுத்த வேண்டும். ஏனெனில் ஸ்பின்னுக்கு எதிராக பேட்டர் அடிக்க முடிவு செய்தால் ஆஃப்-சைட் எல்லை குறைவாக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.