ஷாகின் ஷா அப்ரிடி இப்படித்தான் பந்து வீசுவார்… ரோகித்- ராகுலை எச்சரிக்கும் பிரபலம்!
ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுலுக்கு ஷஹீனை எப்படி சரியாகக் கையாள்வது என்பது குறித்து சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார் இந்திய ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர்.
ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுலுக்கு ஷஹீனை எப்படி சரியாகக் கையாள்வது என்பது குறித்து சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார் இந்திய ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர்.
Sachin Tendulkar gives tips to KL Rahul and Rohit Sharma On How To Tackle Shaheen Afridi Tamil News
T20 World Cup 2022 - Shaheen Afridi - Sachin Tendulkar Tamil News: கடந்த 16 ஆம் தேதி முதல் தொடங்கிய 8 -வது டி20 உலகக் கோப்பை தொடரில் தற்போது தகுதிச் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் வருகிற 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், அதற்காக முன்னாள் சாம்பியனான இந்தியா தீவிரமாக தயராகிறது. இந்திய அணி அதன் முதலாவது லீக் ஆட்டத்தில், கிரிக்கெட் பரம எதிரியான பாகிஸ்தானை மெல்போர்ன் மைதானத்தில் வைத்து சந்திக்கிறது.
Advertisment
பாகிஸ்தான் அணி பேட்டிங் பந்துவீச்சில் ஃபார்மில் உள்ள வீரர்களை கொண்டிருந்தாலும் இந்திய அணியினரின் அச்சமெல்லாம் ஷாஹீன் அப்ரிடி மட்டும் தான். முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வந்த ஷாஹீன் அப்ரிடி சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் விளையாடவில்லை. தற்போது அவர் காயத்தில் இருந்து மீண்டு சிறப்பாக பந்துவீசி வருகிறார்.
Advertisment
Advertisements
ஷாஹீன் அப்ரிடி மீது இந்தியா கொண்டுள்ள அச்சம் ஏன் என்பது நம்மில் பலர் அறிந்த ஒன்றுதான். ஐக்கிய அரபு மண்ணில் நடந்த முந்தைய டி-20 உலக கோப்பையில் தனது தரமான பந்துவீச்சால் இந்திய டாப் ஆடர் பேட்ஸ்மேன்களை விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக, அதிரடி தொடக்க வீரர் ராகுலை முதல் ஓவரிலும், மற்றொரு தொடக்க வீரரான ரோகித்தை 3வது ஓவரிலும் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க செய்தார்.
மேலும், அரைசதம் அடித்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலியையும் அவர் அவுட் செய்தார். இந்த ஆட்டத்தில் மட்டும் அவர் மொத்தமாக விக்கெட்டுகளை வீழ்த்திய இருந்தார். மேலும், பாகிஸ்தானின் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கரின் அறிவுரை
இந்நிலையில், இந்திய ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுலுக்கு ஷஹீனை எப்படி சரியாகக் கையாள்வது என்பது குறித்து சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
"அவர்கள் சர்வதேச அளவில் பெரிய ரன்கள் எடுத்துள்ளனர். அவர்கள் இருவரும் திறமையானவர்கள். அவரை எப்படி சமாளிப்பது என்று அவர்கள் கண்டுபிடித்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். நான் அவரைப் பற்றி என்ன பார்த்தாலும், ஷாஹீன் அப்ரிடி பந்தை மேலே கொண்டு வந்து பந்தை மீண்டும் உள்ளே கொண்டு வர விரும்புகிறார்.
அவர் ஒரு ஆக்ரோஷமான மற்றும் தாக்குதல் பந்து வீச்சாளர். முழுமையாகவும் நேராகவும் பந்து வீச அவர் தன்னைத்தானே பின்வாங்குவார். இதனால், முதலில் பேட்டர்கள் முதல் சில பந்துகளை கவனிக்க வேண்டும். ஸ்விங் இருந்தால் நேராக பேட்டை வைக்கவும். அவர்கள் காற்று மற்றும் ஆடுகளத்திற்கு வெளியே உள்ள நிலைமைகளை முன்கூட்டியே மதிப்பீடு செய்ய வேண்டும்." என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.