scorecardresearch

T20 WC Semi Final: இன்னமும் இந்தியா வெளியேற வாய்ப்பு இருக்கு; வருண பகவான் மனசு வச்சும் காப்பாற்றலாம்!

இந்திய கிரிக்கெட் அணி நடப்பு டி20 உலகக் கோப்பையில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

Semi-final Qualification Scenarios for Group 2 teams in tamil
T20 World Cup 2022: Latest Semi-final Qualification Scenarios for Group 2 Tamil News

T20 world cup 2022 semi final scenarios for group 2 in tamil: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான லீக் ஆட்டத்தில் இந்தியா – வங்க தேச அணிகள் மோதின. இதில், இந்திய அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. அதே நேரத்தில், வங்க தேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளின் வாய்ப்பு கணிசமாகக் குறைந்துள்ளது. அவ்வகையில், குரூப் 2ல் உள்ள நான்கு அணிகளின் வாய்ப்புகளை பற்றி இங்கு நாம் பார்க்கலாம். 

இந்தியா

விளையாடியுள்ள போட்டிகள்: 4, புள்ளிகள்: 6, நெட் ரன்ரேட்: + 0.730, மீதமுள்ள போட்டி: vs ஜிம்பாப்வே

இந்திய கிரிக்கெட் அணி நடப்பு டி20 உலகக் கோப்பையில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி அதன் கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தினாலோ, அல்லது ஆட்டம் கைவிடப்பட்டாலோ, பாகிஸ்தானோ அல்லது வங்கதேசமோ 7 புள்ளிகளைப் பெற முடியாது என்பதால், இந்தியா அரையிறுதிக்கு முன்னேறும். 

ஆனால், இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் தோற்றால், மீதமுள்ள இரண்டு ஆட்டங்களில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால், தென்ஆப்பிரிக்கா பாகிஸ்தானிடம் தோற்று, நெதர்லாந்தை வீழ்த்தினால், தென்ஆப்பிரிக்கா (புள்ளிகளில்) மற்றும் பாகிஸ்தான் (நெட் ரன்-ரேட்டில்) இந்தியாவை விட முன்னேற முடியும். அப்படி நடக்கும் பட்சத்தில் இந்தியாவின் அரையிறுதி கனவு கானல் நீராகிவிடும். 

தென்ஆப்பிரிக்கா

விளையாடி போட்டிகள்: 3, புள்ளிகள்: 5, நெட் ரன்-ரேட்: +2.772, மீதமுள்ள போட்டிகள் போட்டிகள்: vs பாகிஸ்தான், நெதர்லாந்து 

மூன்று ஆட்டங்களில் இருந்து 5 புள்ளிகள், சிறந்த நெட் ரன்-ரேட் இன்னும் இரண்டு ஆட்டங்கள் கைவசம் என்று அரையிறுதிக்குள் நுழைவதற்கான சிறந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா உள்ளது. அந்த அணி அந்த இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்று 7 புள்ளிகள் வரை பெற்றால், முதல் இரண்டு இடங்களுக்குள் வந்துவிடும். 

இருப்பினும், அவர்கள் அந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்றால், அரையிறுதிக்கான வாய்ப்பில் நீடிக்க வங்க தேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும்  போட்டி கைவிடப்பட்ட வேண்டும். அப்போது தான் அந்த இரு அணிகளின் புள்ளிகளும் 5 என்று இருக்கும். 

வங்க தேசம் 

விளையாடிய போட்டிகள்: 4, புள்ளிகள்: 4, நெட் ரன்-ரேட் : -1.276, மீதமுள்ள போட்டி: vs பாகிஸ்தான் 

வங்க தேச அணி அரையிறுதிக்கான போட்டியில் நீடிக்க அவர்களின் கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும். பின்னர் தென்ஆப்பிரிக்கா தனது மீதமுள்ள இரண்டு ஆட்டங்களில் இருந்து ஒரு புள்ளிக்கு மேல் எடுக்காமல் இருக்க வேண்டும். அவ்வாறான நிலையில், வங்க தேசம் மற்றும் தென்ஆப்பிரிக்கா இரண்டும் 6 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். மேலும், வங்க தேச அணியின் நெட் ரன்-ரேட்டும் நல்ல நிலையில் இருக்கும். அதோடு, தென்ஆப்பிரிக்காவின் இரண்டு வெற்றியை விட மூன்று வெற்றிகளைப் பெறும். (அணிகள் புள்ளிகளில் சமமாக இருந்தால், வெற்றிகளின் எண்ணிக்கை முதல் டை-பிரேக்கராகும். அதைத் தொடர்ந்து நெட் ரன்-ரேட் இருக்கும்.)

தென்ஆப்பிரிக்கா 7 புள்ளிகளுக்குச் சென்றால், வங்க தேச அணி நிச்சயமாக மூட்டையை கட்ட வேண்டியது தான். ஏனெனில் அவர்களின் நெட் ரன்-ரேட் இந்தியாவை விட மிகவும் பின்தங்கியுள்ளது. வங்க தேச அணி நெட் ரன்-ரேட்டில் இந்தியாவைக் கடந்து செல்ல, அந்த இரண்டு முடிவுகளின் மார்ஜினின் கூட்டுத்தொகையாக இருக்கும். வங்கதேசம் பாகிஸ்தானை வீழ்த்தியது மற்றும் ஜிம்பாப்வே இந்தியாவை வீழ்த்தியது – 150 ரன்களைத் தாண்ட வேண்டும்.

பாகிஸ்தான்

விளையாடிய போட்டிகள்: 3, புள்ளிகள்: 2, நெட் ரன்ரேட்: + 0.765, மீதமுள்ள போட்டி: vs தென்ஆப்பிரிக்கா, வங்க தேசம் 

பாகிஸ்தான் 6 புள்ளிகளுடன் முன்னேற வேண்டுமானால், அவர்கள் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவை விட குறைந்தபட்சம் ஒரு புள்ளியையாவது முடிக்க வேண்டும். நெதர்லாந்திற்கு எதிரான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா ஒரு புள்ளிக்கு மேல் பெறாவிட்டால், அவர்கள் தென்னாப்பிரிக்காவை விட முன்னேறலாம். ஏனெனில் பாகிஸ்தான் அதிக வெற்றிகளைப் பெறும்.

பாகிஸ்தானின் உயர்ந்த நெட் ரன்ரேட், தற்போது 0.765 ஆக உள்ளது. இந்தியா ஜிம்பாப்வேயிடம் தோற்றால், அவர்கள் இந்தியாவையும் கடந்து செல்ல முடியும். உதாரணமாக, பாகிஸ்தான் 160 ரன்கள் எடுத்தாலும், கடைசி இரண்டு போட்டிகளில் தலா ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், ஜிம்பாப்வே அவர்களை எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களில் (160 ரன்களுக்குப் பிறகு) தோற்கடித்தால், இந்தியாவை முந்திவிடும். 

எவ்வாறாயினும், இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் ஒரு புள்ளியையாவது சமாளித்து எடுத்தால், அவர்கள் பாகிஸ்தான் தொட முடியா உச்சத்திற்கு சென்று விடுவார்கள்.  

 ஜிம்பாப்வே

விளையாடிய போட்டிகள்: 4, புள்ளிகள்: 3, நெட் ரன்ரேட்: -0.313, மீதமுள்ள போட்டி : vs இந்தியா 

ஜிம்பாப்வே ஐந்து புள்ளிகளைப் பெறலாம். அதாவது பாகிஸ்தான், வங்க தேசம் (அவர்களின் ஆட்டம் கைவிடப்பட்டால்), மற்றும் தென்ஆப்பிரிக்கா (இரண்டு ஆட்டங்களிலும் தோற்றால்) புள்ளிகளுடன் சமன் செய்யப்படலாம். ஆனால் ஜிம்பாப்வேயின் நெட் ரன்ரேட் அவர்களை தீவிர போட்டியாளர்களாக மாற்றுவதற்கு மிகவும் குறைவாக உள்ளது. அவர்கள் இந்தியாவை 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தாலும், தென்னாப்பிரிக்கா அவர்களின் நெட் ரன்ரேட்யை மாற்றியமைக்க மொத்தமாக 80 ரன்கள் வித்தியாசத்தில் மீதமுள்ள இரண்டு போட்டிகளில் தோல்வியடைய வேண்டும்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest T20worldcup news download Indian Express Tamil App.

Web Title: Semi final qualification scenarios for group 2 teams in tamil