Shaheen and Shahid Afridi Tamil News: 8-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரின் முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதேபோல், நேற்று அடிலெய்டு ஓவலில் அரங்கேறிய 2-வது அரைஇறுதியில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம், இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த ஆட்டம் வருகிற ஞாயிற்று கிழமை (நவம்பர் 13 ஆம் தேதி) மெல்போர்னில் அரங்கேறுகிறது.
10 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாகின் அஃப்ரிடி
நடப்பு டி20 உலகக் கோப்பையில் முதல் இரண்டு போட்டிகளில் விக்கெட் வீழ்த்த தவறிய பாஸ்கிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் ஷா அஃப்ரிடி, தொடர்ந்து நடந்த போட்டிகளில் மொத்தமாக 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். குறிப்பாக, கடந்த புதன்கிழமை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த அரையிறுதியில் அஃப்ரிடி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தற்போது அவர் ஞாயிற்று கிழமை நடக்கவிருக்கும் இறுதிப்போட்டிக்காக தயாராகி வருகிறார்.
இதற்கிடையில், ரசிகர் ஒருவருக்கு இந்தியக் கொடியில் ஆட்டோகிராஃப் போட்ட ஷாகின் அஃப்ரிடியின் சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் 22 வயதான ஷாகின் அஃப்ரிடி இந்தியக் கொடியில் கையொப்பமிடுவதைக் காணலாம்.
Shaheen Afridi signed the India flag for an Indian fan. Respect ❤️
Like father-in-law, like son-in-law! #T20WorldCup pic.twitter.com/iNTjNsYpJA— Circket Update (@Babarazam35) November 9, 2022
இந்நிலையில், ஷாகின் அஃப்ரிடி இந்தியக் கொடியில் கையொப்பமிடுவதைப் போல் அவரது மாமனாரும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டனுமான ஷாஹித் அஃப்ரிடியும் ரசிகர்களுக்கு இந்தியக் கொடியில் கையொப்பமிட்டுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு, சுவிட்சர்லாந்தில் உள்ள செயின்ட் மோரிட்ஸ் ஐஸ் கிரிக்கெட் போட்டியில் விளையாடியபோது, அஃப்ரிடி இந்தியக் கொடியுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் வீடியோ வைரலாக பரவியது.
இந்த நிலையில், 'மாமனார் போல, மருமகன்' உள்ளார் என்று ரசிகர் ஒருவருக்கு இந்தியக் கொடியில் ஆட்டோகிராஃப் போட்ட ஷாகின் அஃப்ரிடியை இணையவாசிகள் புகழ்ந்துள்ளனர். மேலும், அவர்கள் ஒப்பிட்டு வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளத்தில் வைரலாகிறது.
“ஷாஹீன் (அஃப்ரிடி) காயத்திற்குப் பிறகு வலுவான மறுபிரவேசம் செய்துள்ளார். புதிய பந்தின் முக்கியத்துவம் என்னவென்றால், நீங்கள் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை எடுக்கும்போது, அது எதிரணிக்கு அதிக அழுத்தத்தை உருவாக்குகிறது, ”என்று அஃப்ரிடி சாமா டிவியில் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.