Advertisment

T20 WC: 'இந்தியாவை அரை இறுதிக்குள் எப்படியாவது நுழைய வைக்க போராடுகிறார்கள்' - ஐ.சி.சி மீது அப்ரிடி குற்றச்சாட்டு

டி20 உலக கோப்பையில் ஐசிசி நியாயமற்ற முறையிலும், இந்தியாவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறது என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி குற்றம்சாட்டியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Shahid Afridi accused ICC for being ‘unfair’ and ‘supporting’ India Tamil News

Pakistan’s 33-run win over South Africa on Thursday in Sydney has kept the Super 12 Group 2 semi-final qualification scenarios interesting. (FILE/AP)

News about ICC, India and Shahid Afridi in tamil: ஆஸ்திரேலிய மண்ணில் 8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் புதன் கிழமை (நவம்பர் 2 ஆம் தேதி) இந்தியா – வங்க தேச அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கோலி, ராகுல் சூர்யகுமார் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது.

Advertisment

இதைத்தொடர்ந்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. அப்போது இடையில் மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டது. இதனால், டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி, வங்க தேச அணி 16 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணியால் 16 ஓவர்கள் முடிவில் 145 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் இந்திய அணி டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

publive-image

ஷாஹித் அப்ரிடி கடும் சாடல்

இந்நிலையில், டி20 உலக கோப்பையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நியாயமற்ற முறையிலும், இந்தியாவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறது என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி குற்றம்சாட்டியுள்ளார்.

சாமா டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அப்ரிடி, “மைதானம் எவ்வளவு ஈரமாக இருந்தது என்பதை நீங்கள் பார்த்தீர்கள். ஆனால் ஐசிசி இந்தியாவுக்கு சாதகமாக முடிவெடுத்துள்ளது. அவர்கள் இந்தியா எப்படியாவது அரையிறுதிக்கு செல்லவதை உறுதி செய்ய வேண்டும். நடுவர்களும் அப்படித்தான். இந்தியா - பாகிஸ்தானுக்கு நடுவராக இருந்த நடுவர்கள் சிறந்த நடுவர் விருதுகளைப் பெறுவார்கள்.

மழை பெய்ததால் இடைவேளைக்கு பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியது. இது பல விஷயங்கள் சம்பந்தப்பட்டது. ஐசிசி, இந்தியா விளையாடுவது (விளையாட்டு), அதனுடன் வரும் அழுத்தம், பல காரணிகள் இதில் ஈடுபட்டுள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் லிட்டனின் பேட்டிங் அற்புதமாக இருந்தது. அவர் பாசிட்டீவான கிரிக்கெட்டை விளையாடினார். ஆறு ஓவர்களுக்குப் பிறகு, பங்களாதேஷ் இன்னும் 2-3 ஓவர்களுக்கு விக்கெட்டுகளை இழக்கவில்லை என்றால், அவர்கள் போட்டியில் வென்றிருப்பார்கள் என்று நாங்கள் உணர்ந்தோம். ஒட்டுமொத்தமாக, வங்கதேசம் காட்டிய ஆட்டம் அற்புதமாக இருந்தது." என்று அவர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: T20 WC: ‘ஐ.சி.சி சாதகமாக இருப்பதாக நான் நினைக்கவில்லை.’ – அப்ரிடிக்கு பி.சி.சி.ஐ தலைவர் பதிலடி!

அரையிறுதி சுவாரசியம்

இதற்கிடையில், வருகிற ஞாயிற்றுக்கிழமை நடக்கும் லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தினால் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறும். பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்ல அந்த அணி வங்க தேச அணியை தோற்கடிக்க வேண்டும். குறைந்தது இந்தியா அல்லது தென்ஆப்பிரிக்காவை தோற்கடிக்கப்பட வேண்டும்.

சிட்னியில் நேற்று வியாழன் அன்று தென்ஆப்பிரிக்காவை பாகிஸ்தான் 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சூப்பர் 12 குரூப் 2 அரையிறுதித் தகுதி வாய்ப்புகளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் டி20 உலகக் கோப்பை குழுப் போட்டிகளின் இறுதிச் சுற்றுக்கு சுவாரஸ்யமாக வைத்துள்ளது.

இதையும் படியுங்கள்: T20 WC: ‘ஐ.சி.சி சாதகமாக இருப்பதாக நான் நினைக்கவில்லை.’ – அப்ரிடிக்கு பி.சி.சி.ஐ தலைவர் பதிலடி!

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Shahid Afridi Sports Cricket Indian Cricket Team T20 Indian Cricket Icc India Vs Bangladesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment