Advertisment

IND vs ENG: இந்த காரணங்களால் இந்தியாவை விட இங்கிலாந்து பெஸ்ட்; பாக். பிரபலம் கணிப்பு

பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ஷாஹித் அப்ரிடி நாக் அவுட் கட்டத்தில் இந்தியாவின் அதிர்ஷ்டம் குறித்து ஒரு பெரிய கணிப்பு செய்துள்ளார்.

author-image
WebDesk
Nov 09, 2022 13:03 IST
Shahid Afridi makes bold prediction for India vs England semifinal Tamil News

Former Pakistan all-rounder Shahid Afridi made a huge prediction on India's fortune at the knockout stage Tamil News

India vs England T20 World Cup Semi-Final prediction, Shahid Afridi Tamil News: ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்று வரும் 8வது டி20 உலகக் கோப்பை (டி20 உலகக் கோப்பை 2022) தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடருக்கான முதலாவது அரையிறுதி ஆட்டம் இன்று நடவிருக்கும் நிலையில், அந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அதைத் தொடர்ந்து நாளை அடிலெய்டில் நடைபெறும் 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

Advertisment

நடப்பு டி20 உலகக் கோப்பையில் நெதர்லாந்து அணி தென்ஆப்பிரிக்காவை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. இந்த வெற்றி பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற உதவியது. பாகிஸ்தானின் அதே குழுவில் இடம் பெற்றிருந்த ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, சூப்பர் 12 சுற்று போட்டிகள் முடிவில், ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. தற்போது அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறது.

ஷாஹித் அப்ரிடி கருத்து

இந்நிலையில், இந்த அரையிறுதி போட்டிக்கு முன்னதாக, பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ஷாஹித் அப்ரிடி நாக் அவுட் கட்டத்தில் இந்தியாவின் அதிர்ஷ்டம் குறித்து ஒரு பெரிய கணிப்பு செய்துள்ளார்.

publive-image

பாகிஸ்தானின் தொலைக்காட்சியில் ஒரு உரையாடலின் போது பேசிய ஷாஹித் அப்ரிடி, “இரு அணிகளும் சமமாக சமநிலையில் உள்ளன. மற்றும் போட்டியில் சிறப்பாக செயல்பட்டன. இவர்களின் கடந்தகால செயல்பாடுகள் கூட நன்றாகவே இருந்தது. ஆனால், என் கருத்துப்படி, இங்கிலாந்தை இந்தியாவை விட 60-65 சதவீதம் மேலே வைத்திருப்பேன்.

இரு அணிகளின் பேட்டிங் அல்லது பந்துவீச்சை எடுத்துக்கொண்டால், அவர்கள் சமபலத்துடன் இருக்கிறார்கள். சுழற்பந்து வீச்சாளர்களை எடுத்துக்கொண்டாலும், அவர்களின் கலவை மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

இருப்பினும், இது ஒரு பெரிய போட்டி மற்றும் குறைவான தவறுகளை செய்யும் அணி, மேலும் 100 சதவீத முயற்சியை கொடுக்கும் பதினொரு வீரர்கள் கொண்ட அணிக்கு தான் வெற்றி." என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

#Cricket #Sports #England Cricket Team #Australia #India Vs England #T20 #Shahid Afridi #Worldcup #Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment