Advertisment

இப்படிச் செய்தால் இனி டெட் பால்… ICC T20 World Cup-ல் 5 புதிய விதிமுறைகள்!

சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பையில் இந்த விதி பின்பற்றப்பட்டது. இந்த விதியின்படி, இந்தியாவுக்கு இரண்டு முறை அபராதம் விதிக்கப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
T20 World Cup 2022: 5 New Rules ICC Will Introduce In The World Cup Tamil News

ICC New Rules for T20 World Cup in Australia, T20 Cricket tamil news

 ICC’s 5 New Rules - T20 World Cup 2022 Tamil News: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC - ஐசிசி) விளையாட்டின் தரத்தை மேம்படுத்துவதற்காக கிரிக்கெட்டில் சில விதிகளை தொடர்ந்து மாற்றியமைக்கிறது அல்லது மாற்றி வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நாளை முதல் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் 5 புதிய விதிகளை ஐசிசி அறிமுகப்படுத்த உள்ளது.

Advertisment

டி20 உலகக் கோப்பையின் போது வீரர்கள் இந்த விதிகளை கடைபிடிக்க வேண்டும். அப்படி அவர்கள் மீறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும். இந்த விதிகளில் சில ஏற்கனவே டி-20 பார்மெட்டில் நடைமுறையில் உள்ளன. ​​​​இவற்றில் சில போட்டியின் போது நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை 2022: ஐசிசி அறிமுகப்படுத்தியுள்ள 5 புதிய விதிகள் என்ன?

1) மன்காடிங் இனி ரன்-அவுட் என அழைக்கப்படும்

publive-image

மன்காடிங் எப்போதுமே கிரிக்கெட்டில் மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே கருதப்படுகிறது. இருப்பினும், ‘மன்காடிங்’ அல்லது ‘ரன் அவுட் ஆக்காதவர்’ என்பது இனி சர்ச்சைக்குரியதாக கருதப்படாது. அது இனி ​​ரன்-அவுட் என்றே அழைக்கப்படும். மேலும் அது சரியான முறையில் செயல்படுத்தப்படும்.

எனவே, பந்துவீச்சாளர்கள் பந்து வீச்சாளர் ரன்-அப் செய்யும் போது அல்லது பந்து வீச்சாளர் பந்தை வழங்குவதற்கு முன்பு கிரீஸை விட்டு வெளியேற முயற்சித்தால், நான்-ஸ்ட்ரைக்கரை ரன் அவுட் செய்யலாம். ஐசிசி மன்காடிங்கை ‘நியாயமற்ற விளையாட்டு பிரிவில் இருந்து ‘ரன்-அவுட்’ பிரிவுக்கு தற்போது மாற்றியுள்ளது.

2) கேட்ச் பிடித்தற்கு பிறகு புதிய பேட்ஸ்மேன் ஸ்ட்ரைக் எடுக்க வேண்டும்

publive-image

முன்னதாக, ஒரு பேட்ஸ்மேன் கேட்ச் அவுட் ஆனபோது, ​​அவர் தனது பார்ட்னருடன் ஸ்ட்ரைக் மாற்றும் வாய்ப்பு கிடைத்தது. பந்து பீல்டரிடம் கேட்ச் ஆவதற்கு முன்பு பேட்ஸ்மேன் தனது ஸ்டிரைக்கை மாற்றிக்கொள்ளலாம். ஆனால், இந்த விதியை ஐசிசி மாற்றியுள்ளது.

டி20 உலகக் கோப்பை முதல், கேட்ச்-அவுட்டில் ஆட்டமிழக்கும்போது பேட்ஸ்மேன்கள் தங்கள் ஸ்டிரைக்கை மாற்ற முடியாது. கிரீஸுக்கு வரும் புதிய பேட்ஸ்மேன் ஸ்ட்ரைக் எடுக்க வேண்டும். புதிய பேட்ஸ்மேன்கள் எப்போதும் ஸ்ட்ரைக் எடுக்க வேண்டியிருக்கும் என்பதால், கேட்சுக்கு முன் பேட்டர்கள் தங்கள் ஸ்ட்ரைக்கை மாற்றினால் பரவாயில்லை.

3) ஸ்லோ ஓவர் ரேட்டுக்கு பீல்டிங் பெனால்டி

இந்த ஆண்டு இதுவரை நடந்த சில விளையாட்டுகளில் இந்த விதி நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பையில் இந்த விதி பின்பற்றப்பட்டது. இந்த விதியின்படி, இந்தியாவுக்கு இரண்டு முறை அபராதம் விதிக்கப்பட்டது.

publive-image

இந்த விதிப்படி, அணிகள் அதிக விகிதத்திற்கு இணங்கத் தவறினால் பீல்டிங் அபராதம் விதிக்கப்படும். ஸ்லோ-ஓவர் வீதத்தில் ஒரு அணி குற்றம் சாட்டப்பட்டால், மீதமுள்ள டெத் ஓவர்களுக்கு மேலும் ஒரு கூடுதல் பீல்டர் வட்டத்திற்குள் வைக்கப்படுவார்.

எடுத்துக்காட்டாக, ஒரு அணி இறுதி ஓவரை (20வது ஓவர்) திட்டமிட்ட நேரத்தில் தொடங்கத் தவறினால், இறுதி ஓவரில் ஒரு கூடுதல் பீல்டரை 30-யார்டு வட்டத்திற்குள் வைக்க வேண்டும். கட்டாயமாக 90 நிமிட இடைவெளி வரை ஒரு அணி 18 ஓவர்களை மட்டுமே முடித்துள்ளது என்று வைத்துக்கொள்வோம், அடுத்த 2 ஓவர்களுக்கு ஒரு கூடுதல் பீல்டரை 30 யார்டு வட்டத்திற்குள் வைத்திருக்க வேண்டும்.

4) ஆடுகளத்திற்கு வெளியே டெலிவரிகளை விளையாடுதல்

publive-image

இந்த டி-20 உலகக் கோப்பை தொடரில் ஐசிசி அறிமுகப்படுத்தும் மற்றொரு விதி இதுவாகும். ஒரு பேட்ஸ்மேன் விளையாடும் பகுதிக்கு (பிட்ச்) வெளியே பந்தை விளையாட முயற்சித்தால், அவரது உடலின் சில பகுதி அல்லது பேட் விளையாடும் பகுதிக்குள் இருக்க வேண்டும். ஷாட் அடிப்பதற்காக பேட்ஸ்மேன் விளையாடும் இடத்தை விட்டு வெளியேறினால், பந்து டெட் பால் என்று அழைக்கப்படும். மேலும், அத்தகைய பந்துகள் நோ-பால் என்றும் அழைக்கப்படும் மற்றும் பேட்டிங் செய்யும் அணிக்கு ஃப்ரீ ஹிட் கிடைக்கும்.

5) ஃபீல்டர்களின் நியாயமற்ற மூமென்ட்களுக்கு அபராதம்

publive-image

இது ஃபீல்டிங் செய்யும் அணிக்கு மட்டும் பொருந்தும் மற்றொரு விதியாகும். ஒரு பந்து வீச்சாளர் ரன்-அப் எடுக்கும் போது, ​​பேட்ஸ்மேன்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் பீல்டர்கள் வேண்டுமென்றே அல்லது நியாயமற்ற மூமென்ட்களைச் செயல்படுத்துவதைக் கண்டால், நடுவர் பந்தை டெட் என்று அழைக்கலாம் மற்றும் பேட்டிங் அணிக்கு 5 பெனால்டி ரன்களை வழங்கலாம்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Sports Cricket Indian Cricket Team Indian Cricket Bcci Icc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment