T20 World Cup 2022 all you need to know: squads, dates, venues Tamil News
ICC T20 World Cup: Full Schedule of Team India Tamil News: 8 - வது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நாளை (அக்டோபர் 16-ம் தேதி முதல்) ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. நவம்பர் 13 ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் களமிறங்குகின்றன. இத்தொடரில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட உள்ளன.
Advertisment
2 குழுக்கள் – சூப்பர் 12 ஆட்டங்கள்
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 16 ஆம் தேதி தகுதிச் சுற்றுடன் தொடங்குகிறது. இந்த சுற்றில் தகுதி பெறும் 2 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 12 சுற்றில், அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, குரூப் 1ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து போன்ற அணிகளும், குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளும் இடம்பிடித்துள்ளன.
சூப்பர் 12 சுற்றின் போது, ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு போட்டியில் விளையாடும். எனவே, ஒவ்வொரு அணியும் மொத்தம் 5 போட்டிகளில் விளையாடும். இந்த சுற்றின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் இறுதிப் போட்டியில் மோதுவார்கள்.
Advertisment
Advertisements
இந்தியா vs பாகிஸ்தான்
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. எனவே, இந்திய அணி வருகிற அக்டோபர் 23-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக தனது தொடக்க ஆட்டத்தில் விளையாடுகிறது. ஏற்கனவே நடந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி அதன் முதல் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. அந்த ஆட்டத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. தொடர்ந்து நடந்த சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி கண்டது. அதன்பிறகு இலங்கை உடனான ஆட்டத்தில் தோல்வியுற்ற இந்தியா, தொடரில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.
இதேபோல், கடந்த ஆண்டு ஐக்கிய அரபு மண்ணில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி அதன் முதல் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் படுதோல்வி அடைந்தது. இதனால் இந்தியா தகுதிச் சுற்றுடன் நாடு திரும்பியது. எனவே, இந்த தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்துமா? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.
டி 20 உலகக் கோப்பை: இந்தியா மோதும் ஆட்டங்கள் பின்வருமாறு:
அக்டோபர் 23 – இந்தியா vs பாகிஸ்தான் (16வது போட்டி, சூப்பர் 12) மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன் பிற்பகல் 1:30
அக்டோபர் 27 – இந்தியா vs A2, (23வது போட்டி, சூப்பர் 12) சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி மதியம் 12:30
அக்டோபர் 30 – இந்தியா vs தென்னாப்பிரிக்கா, (30வது போட்டி, சூப்பர் 12) பெர்த் ஸ்டேடியம், பெர்த் மாலை 4:30
நவம்பர் 2 – இந்தியா vs பங்களாதேஷ், (35வது போட்டி, சூப்பர் 12) அடிலெய்டு ஓவல், அடிலெய்டு பிற்பகல் 1:30
நவம்பர் 6 – இந்தியா vs B1, (42வது போட்டி, சூப்பர் 12) மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன் பிற்பகல் 1:30