Top 5 Cricket News Of The Day in tamil: ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ விளையாட்டு செய்திகள் பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய டாப் 5 கிரிக்கெட் விளையாட்டு செய்திகளை இங்கு பார்க்கலாம்.
- சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறிய இலங்கை
ஆஸ்திரேலியாவில் 8-வது டி-20 உலக கோப்பை போட்டிகள் கடந்த 16 ஆம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்றுக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது. இதில் ஏ பிரிவில் இன்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் கீலாங் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்க தொடங்கிய முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணி, நெதர்லாந்துடன் மோதியது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய குசல் மெண்டிஸ் 44 பந்துகளில் 5 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் என 79 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 163 ரன்கள் கொண்ட வெற்றி இலக்குடன் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 16 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை இலங்கை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
- டி20: உலக கோப்பை - முன்னணி வீரர்கள் விலகல்
நடப்பு டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி சூப்பர்-12 சுற்றில் நேரடியாக களமிறங்குகிறது. அந்த அணியில் இடம்பிடித்திருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லே காயம் காரணமாக விலகியுள்ளார். பயிற்சியின் போது அவரது இடது கணுக்காலில் காயம் ஏற்பட்ட நிலையில், டாப்லே தொடரில் இருந்து முற்றிலும் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மாற்று வீரர்கள் பட்டியலில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் டைமல் மில்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேபோல் இலங்கை அணியில் இடம் பிடித்து இருந்த வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீராவும் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளர். இத்தொடருக்கான முதல் சுற்றில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய சமீராவுக்கு பின்னங்காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் அந்த ஆட்டத்தின் போது பாதியில் வெளிறேினார். அவருக்கு பதிலாக 29 வயது வேகப்பந்து வீச்சாளர் கசுன் ரஜிதா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
- டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியாவில் கேமரூன் கிரீன் சேர்ப்பு
டி20 உலக கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்த விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்கிலிஸ் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். தற்போது அவருக்கு பதிலாக அணியில் கேமரூன் கிரீன் சேர்க்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அதிரடியாக விளையாடிய கேமரூன் கிரீன் 2 அரைசதங்களை விளாசி இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
- பெண்கள் டி20 பேட்டிங் தரவரிசை: 2-வது இடத்துக்கு முன்னேற்றிய ஸ்மிருதி மந்தனா
ஐ.சி.சி.-யின் பெண்கள் டி20 போட்டிக்கான தரவரிசை பட்டியல் வெளியிட்டப்பட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (730 ரேட்டிங் புள்ளி) முதல் முறையாக 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனியை (743 ரேட்டிங் புள்ளி) விட மந்தனா 13 புள்ளிகள் மட்டுமே பின்தங்கியுள்ளார். 3-வது இடத்தில் மற்றொரு ஆஸ்திரேலிய வீராங்கனை மெக் லானிங் உள்ளார். இந்திய வீராங்கனைகள் ஷபாலி வர்மா 7-வது இடத்திலும், ஜெமிமா 8-வது இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் தீப்தி சர்மா முதல் முறையாக 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சக இந்திய வீராங்கனை ரேணுகா சிங் உள்ளார்.
5.மெல்போர்ன் வந்தடைந்த இந்திய அணி
டி20 உலகக்கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அதன் முதலாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. வருகிற ஞாயிற்றுக்கிழமை இந்த ஆட்டம் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி பிரிஸ்பேனில் இருந்து மெல்போர்னுக்கு வந்தடைந்துள்ளது. இந்திய அணி பயணம் செய்த வீடியோவை தற்போது பிசிசிஐ அதன் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் ஆட்டத்தை காண இரு நாட்டு ரசிகர்களும், உலகம் முழுவமுள்ள கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், இப்போட்டி நடைபெறும் நாளில் மெல்போர்ன் மைதானத்தில் மழை பெய்ய 80 சதவீத வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையை கூறியுள்ளது. இந்த செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியடைய செய்துள்ளது.
Perth ✔️
Brisbane ✔️
Preparations ✔️
We are now in Melbourne for our first game! #TeamIndia #T20WorldCup pic.twitter.com/SRhKYEnCdn— BCCI (@BCCI) October 20, 2022
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.