News about Zimbabwe, Virat Kohli in tamil: 8-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர்12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதின. அதன்படி, குரூப் 1ல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2ல் இருந்து பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இந்நிலையில், சூப்பர் 12 லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 61 ரன்களும், தொடக்க வீரர் ராகுல் 51 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து 187 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணி 115 ரன்கள் மட்டும் எடுத்து 17.2 வது ஓவரில் ஆல்-அவுட் ஆகியது. இதனால் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் குரூப் 2ல் இந்திய அணி அதன் இடத்தை தக்கவைத்துக்கொண்டது.
இடது பக்க நெஞ்சில் கை வைத்து மூச்சு வாங்கிய விராட் கோலி: ரசிகர்கள் ஷாக்
இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் களமாடி விளையாடிய நட்சத்திர வீரர் விராட் கோலி 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் தொடக்க வீரர் ராகுலுடன் ஜோடியில் இருந்த நிலையில், 7 ஓவரில் முதல் பந்தை விராட் கோலி கவரில் அடித்து வேகமாக ஓடி இரண்டு ரன்கள் எடுத்தார். இதேபோல் அடுத்த பந்தையும் அடித்து மீண்டும் 2 ரன்கள் ஓடி எடுத்த கோலி, கிரீஸுக்கு சிறிது நேரம் மூச்சை ஆழமாக இழுத்து விட்டு ஆசுவாச படுத்தினார்.
பின்னர், எதிர்முனையில் இருக்கும் நடுவர், ராகுல், மற்றும் பந்து வீச்சாளருக்கு புரியும்படி தனது இடது பக்க நெஞ்சில் கை வைத்து காண்பித்து மூச்சு வாங்குகிறது. சிறிது இடைவெளி வேண்டும் என்பதைப் போல் சிக்கனல் செய்தார். இது அங்கு குடியிருந்த ரசிகர்களையும், நேரலையில் பார்த்த ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
சர்வதேச கிரிக்கெட்டில் மிக ஃபிட்டான வீரராக வலம் கோலி வேகமாக ஓடுவது, குயிக் சிங்கிள், இரண்டு அல்லது மூன்று ரன்களை சளைக்காமல் ஓடும் திறன் கொண்டவராக இருந்து வருகிறார். ஆனால், அவர் நேற்றைய ஆட்டத்தின் போது அவ்வாறு சிக்னல் செய்தது, அவரிடம் ஏதோ பிரச்சனை இருப்பது போல் காட்சியளித்தது. எனினும், அது குறித்து எந்த அதிகாரப்பூர்வ செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.
இந்நிலையில், விராட் கோலி தனது இடது பக்க நெஞ்சில் கை வைத்து மூச்சு வாங்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ள நிலையில், அது கிரிக்கெட் ரசிர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணையம் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
— Guess Karo (@KuchNahiUkhada) November 6, 2022
நடப்பு டி-20 உலக கோப்பை தொடருக்கான அரையிறுதி ஆட்டங்கள் இந்த வாரத்தில் நடக்கவுள்ளன. அதன்படி, வருகிற புதன்கிழமை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து வியாழக்கிழமை நடக்கும் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil