scorecardresearch

பூதாகரமான கோலியின் ‘ஃபேக் ஃபீல்டிங்’ சர்ச்சை… ஐ.சி.சி விதி என்ன சொல்கிறது?

ஐசிசி-யின் விதி 41.5.1 -ன் படி, ஸ்டிரைக்கர் பந்தைப் பெற்ற பிறகு, எந்த ஒரு பீல்டரும் வேண்டுமென்றே, வார்த்தை அல்லது செயலால், பேட்ஸ்மேனை திசை திருப்புவது, ஏமாற்றது அல்லது தடை செய்ய முயற்சிப்பது நியாயமற்றது.

பூதாகரமான கோலியின் ‘ஃபேக் ஃபீல்டிங்’ சர்ச்சை… ஐ.சி.சி விதி என்ன சொல்கிறது?
What Does 'Fake Fielding' Mean According To ICC Law explained in tamil

News about Bangladesh, Virat Kohli and fielding in tamil: 8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடருக்கான சூப்பர் 12 சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்தியா – வங்க தேச அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் நேற்று முன்தினம் புதன் கிழமை (நவம்பர் 2 ஆம் தேதி) அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில், இந்திய அணி டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ஃபேக் ஃபீல்டிங் சர்ச்சை… இந்தியா வெற்றி பற்றி வங்கதேசம் புகார்

இந்நிலையில், இந்த ஆட்டத்தின் போது இந்திய வீரர் விராட் கோலி ‘Fake Fielding’ ‘ஃபேக் ஃபீல்டிங்’ (போலியாக வீசியதற்காக) செய்தார் என்றும், கோலியின் அந்த செயலுக்கு இந்தியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஐசிசி-யின் சட்ட விதிகளின்படி, ‘ஒரு பேட்டரை ஏமாற்றியதற்காக’ ஐந்து ரன்கள் அபராதமாக வழங்கப்படுகிறது. அப்படி அந்த ரன்கள் கொடுக்கப்பட்டிருந்தால் போட்டி டையாக இருந்திருக்கும் என்றும் வங்கதேச அணியினர் இந்தியா மீதும், கோலி மீதும் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

இது தொடர்பாக வங்க தேச விக்கெட் கீப்பர் வீரர் நூருல் ஹசன், “களத்தில் நடந்த ஒரு பெரிய சம்பவத்தை நடுவர் எப்படி புறக்கணித்தார் என்று தெரியவில்லை. அது அவர்களுக்கு போட்டியை வெல்லக்கூடும். அது ஈரமான மைதானம் என்பதை நாங்கள் அனைவரும் பார்த்தோம். இறுதியில், இந்த விஷயங்களைப் பற்றி பேசும்போது, ​​​​ஒரு ஃபேக் ஃபீல்டிங் இருந்தது. அது ஐந்து ரன்கள் பெனால்டியாக இருந்திருக்கலாம். அதுவும் எங்கள் வழியில் சென்றிருக்கலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அது கூட நடக்கவில்லை.” என்று அவர் கூறியிருந்தார்.

நூருல் ஹசன் குறிப்பிடும் சம்பவம் 7வது ஓவரில் நடந்தது. அப்போது லிட்டன் தாஸ் அக்சர் பட்டேலின் பந்தை டீப்-ஆஃப்-சைட்டில் அடித்தார். பந்தை எடுத்த அர்ஷ்தீப் சிங் த்ரோவை அனுப்பியபோது, ​​பாயிண்டில் நின்ற கோலி பந்து அவரைத் தாண்டிச் செல்லும்போது ஸ்டம்பிக்கு பிடித்து வீசுவது போல பாவனை செய்தார். அந்த நேரத்தில், கள நடுவர்களான மரைஸ் எராஸ்மஸ் மற்றும் கிறிஸ் பிரவுன் ஆகியோர் நடவடிக்கை எடுக்கவில்லை. மறுமுனையில் இருந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோவும் அதை சுட்டிக்காட்டாததால் களத்தில் இது கவனிக்கப்படாமல் போனது.

தற்போது இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், இணையம் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்திய வீரர் கோலி இப்படி செய்தது ஐசிசி-யின் 41.5-வது விதிமுறைக்கு முரணானது என்றும், விதிப்படி அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் வங்கதேச ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். மேலும், ஆடுகளத்தில் திசை திருப்புதல் நடந்துள்ளது என்றும் நடுவர்கள் சரியான முடிவு எடுக்காமல் இருந்தது முறையானது அல்ல என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

‘Fake Fielding’சர்ச்சை… ஐ.சி.சி விதி என்ன சொல்கிறது?

ஐசிசி-யின் விதி 41.5.1 -ன் படி, ஸ்டிரைக்கர் பந்தைப் பெற்ற பிறகு, எந்த ஒரு பீல்டரும் வேண்டுமென்றே, வார்த்தை அல்லது செயலால், பேட்ஸ்மேனை திசை திருப்புவது, ஏமாற்றது அல்லது தடை செய்ய முயற்சிப்பது நியாயமற்றது.

மேலும், “எந்தவொரு கவனச்சிதறல், ஏமாற்றுதல் அல்லது தடைகள் வேண்டுமென்றே உள்ளதா இல்லையா என்பதை நடுவர்களில் ஒருவர் தீர்மானிக்க வேண்டும்” மற்றும் “ஒரு பீல்டர் அத்தகைய கவனச்சிதறல், ஏமாற்றுதல் அல்லது தடையை ஏற்படுத்தியதாகவோ அல்லது ஏற்படுத்த முயற்சித்ததாகவோ நடுவர் கருதினால், அவர்கள் உடனடியாக அந்த குறிப்பிட்ட பந்து வீச்சை டெட் பால் என சிக்னல் செய்து, அழைப்பிற்கான காரணத்தை மற்ற நடுவரிடம் தெரிவிக்க வேண்டும். அத்தகைய வழக்கு ஏதேனும் இருந்தால், “பவுலரின் இறுதி நடுவர் பேட்டிங் பக்கத்திற்கு 5 பெனால்டி ரன்களை வழங்குவார்” என்று விதிகள் மேலும் கூறுகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest T20worldcup news download Indian Express Tamil App.

Web Title: Virat kohli icc law on fake fielding in tamil