Advertisment

IND vs PAK: பரபரப்பு ஆட்டத்தில் தோல்வி… பாக்,. டிரஸிங் ரூம்மில் பாபர் பேசியது என்ன? - வீடியோ!

இந்தியா எதிரான ஆட்டத்தில் தோல்வி கண்டா பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் டிரஸிங் ரூமிற்கு சென்ற நிலையில், அங்கு ஒவ்வொருவரும், ஒரு இடத்தில் சோகமாக அமர்ந்திருந்தனர்.

author-image
WebDesk
Oct 24, 2022 14:07 IST
Watch video: Babar Azam’s Motivational speech after losing to ind Tamil News

IND vs PAK: Babar Azam's riveting speech after Pakistan's heart-breaking loss to India Tamil News

IND vs PAK  T20 World Cup 2022  - Babar Azam Tamil News: ஆஸ்திரேலிய மண்ணில் 8வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான சூப்பர் 12 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மெல்போர்னில் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 160 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

Advertisment

பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முகமது நவாஸ், ஒரு நோ பால், 2 ஒய்டு, ஒரு சிக்சர் என கொடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். அவரின் இந்த பந்துவீச்சு பாகிஸ்தான் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கேப்டன் பாபர் அசாம் ஏன் கடைசி ஓவரை சுழற்பந்தவீச்சாளருக்கு கொடுத்தார்? என்றும், அவர் இந்த முடிவு குறித்தும் கேள்விகள் எழுந்தன. இந்தப் போட்டிக்கு பிறகு, பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் டிரஸிங் ரூமிற்கு சென்ற நிலையில், அங்கு ஒவ்வொருவரும், ஒரு இடத்தில் சோகமாக அமர்ந்திருந்தனர்.

மெண்டர் ஹைடன் பேச்சு

publive-image

அப்போது ரஸிங் ரூமில் அமர்ந்திருந்த வீரர்களைப் பார்த்து பேசிய பாகிஸ்தான் அணியின் மெண்டர் மேத்தீவ் ஹைடன், 'இது ஒரு சிறந்த போட்டியாக இருந்தது. இந்தப் போட்டி சரியான சவாலாக இருந்தது. ஆனால் முடிவு நமக்கு சாதகமாக அமையவில்லை. ஆனால் இந்த தோல்வி நமது பயணத்தை நிறுத்தாது. இந்த தோலவியை இங்கே விட்டு நகர்ந்து செல்லுங்கள்' என்று கூறினார்.

கேப்டன் பாபரின் நெகிழ்ச்சி பேச்சு

publive-image

இதன்பிறகு பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், "சகோதரர்களே இது சிறந்த போட்டியாக இருந்தது. நாம் இந்த போட்டிக்காக பல முயற்சிகளை செய்தோம். ஆனால் சில தவறுகளும் நிகழ்ந்தது. அந்த தவறிலிருந்து நாம் படத்தை கற்று கொள்ள வேண்டுமே தவிர, விழுந்துவிட கூடாது. இது பெரிய தொடர். இன்னும் நமக்கு நிறைய போட்டிகள் இருக்கிறது. நாம் இவரால் தோற்றோம் என்று யாரும் யாரையும் கை காட்ட கூடாது.

நாம் ஒரு அணியாக தான் தோற்றோம். வென்றால் ஒரு அணியாக தான் வெல்வோம். நவாஸ், நீங்கள் ஒரு சாம்பியன் வீரர். கவலைப்பட தேவையில்லை. இன்னும் நீங்கள் எனக்காக நிறைய போட்டிகளை வென்று தரப்போகிறீர்கள்.உங்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நெருக்கடியான போட்டியை கடைசி வரை கொண்டு சென்றீர்கள். இந்தப் போட்டியில் நாம் பாராட்டத்தக்க விசயங்களை செய்ததோம். அந்த நல்ல விசயங்களை பாருங்கள். தவறுகளை திருத்தி கொள்ள முயற்சி செய்வோம் என்று கூறி தனது அணி வீரர்களுக்கு ஊக்கமளித்தார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

#Cricket #Sports #Babar Azam #Australia #T20 #India Vs Pakistan #Worldcup
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment