ஷாகின் ஷா அப்ரிடி பந்துகளை அடிச்சே ஆகணும்… ரோகித் சர்மா ஸ்பெஷல் பிராக்டீஸ் வீடியோ
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடியின் வேகத் தாக்குதலை சமாளிப்பதற்காக தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்.
IND vs PAK: Rohit Sharma gears up to face nemesis Shaheen Shah Afridi, Rahul Dravid plans SPECIAL throwdown session facing left-arm pacers Tamil News
IND vs PAK: Rohit Sharma - shaheen Shah Afridi Tamil News: 8 -வது டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடையும் நிலையில், நாளை முதல் (அக்டோபர் 22 ஆம் தேதி) சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் தொடங்குகின்றன. சிட்னியில் நாளை நடக்கும் முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Advertisment
நாளை மறுநாள் ஞாயிற்றுகிழமை (அக்டோபர் 23 ஆம் தேதி) இந்திய அணி அதன் முதல் லீக் ஆட்டத்தில், கிரிக்கெட்டில் பரம எதிரியாக பாகிஸ்தானை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து சந்திக்கிறது. இந்தப் போட்டிக்காக முன்னாள் சாம்பியனான இந்தியா தீவிரமாக தயராகிறது.
ஷாகின் ஷா அப்ரிடியை சமாளிக்க ரோகித் சர்மா ஸ்பெஷல் பிராக்டீஸ்
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடியின் வேகத் தாக்குதலை சமாளிப்பதற்காக தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்.
பொதுவாக, கேப்டன் ரோகித் இடது கை பந்துவீச்சாளர்களுக்கு எதிராக திணறுபவராகவே இருந்து வருகிறார். அவர்களை சந்திக்கும் முன், 140 என இருக்கும் அவரது ஸ்ட்ரைக் ரேட், அதற்குப் பின் 38 என குறைந்து விடுகிறது. அதேபோல், இடது கை பந்துவீச்சுக்கு எதிராக அவர் 19 முறை ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார். மேலும், 58 போட்டிகளில் 25.68 என்ற சராசரியுடன் 488 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இந்த நிலையில் தான், பாகிஸ்தானின் துருப்பு சீட்டான வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடியின் பந்துவீச்சை திறம்பட எதிர்கொள்ள கேப்டன் ரோகித் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளார். அவருக்கு இன்று காலை இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், வலைப் பயிற்சியின் முதல் செஷனில்மிகவும் சிறப்பான பயிற்சியை ஏற்பாடு செய்திருந்தார். அதன்படி, இடது கை மற்றும் வலது கை வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சு மற்றும் இடது கை த்ரோ டவுன் என அவருக்கு கொடுக்கப்பட்டது.
ஷாஹீன் ஷா அப்ரிடி மட்டுமல்ல, இந்திய பேட்ஸ்மேன்கள் அவரைப் போன்ற இடது கை பந்துவீச்சாளர்களுக்கு எதிராக திணறிய வரலாறு உண்டு. குறிப்பாக, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் போது முகமது அமீர், 2019 ஆம் ஆண்டு ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையின் போது டிரென்ட் போல்ட் மற்றும் 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் போது ஷாஹீன் ஷா போன்ற பந்துவீச்சாளர்கள் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை சிதைத்துள்ளனர். அதிலும் குறிப்பாக, பவர் பிளேயின் போது தான் அதிக சேசத்தை ஏற்படுத்தியுள்ளனர்.