scorecardresearch

இலங்கைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த கார்த்திக் மெய்யப்பன்… ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தல்!

டி20 உலக கோப்பை: இலங்கைக்கு எதிரான தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியின் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து மிரட்டியுள்ளார்.

இலங்கைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த கார்த்திக் மெய்யப்பன்… ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தல்!
ICC T20 World Cup: UAE’s Karthik Meyyappan took first hat-trick against SL Tamil News

ICC T20 World Cup – Karthik Meyyappan – Sri Lanka vs United Arab Emirates Tamil News: 16 அணிகள் பங்கேற்கும் 8வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நேற்று முன்தினம் தொடங்கி நவம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிது. 16 அணிகளில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக தகுதி சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

ஹாட்ரிக் விக்கெட் எடுத்த கார்த்திக் மெய்யப்பன்

இந்நிலையில், இன்று நடந்த 6 வது போட்டியில், இலங்கை – ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. இதில், இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் பாத்தும் நிஸ்ஸங்க 74 ரன்கள் எடுத்தார். ஐக்கிய அரபு அமீரக அணி தரப்பில் அதிகபட்சமாக கார்த்திக் மெய்யப்பன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த 3 விக்கெட்டுகளையும் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் விக்கெட்களாக வீழ்த்தி அசத்தினார். ஆட்டத்தின் 15-வது ஓவரை வீசிய அவர், பனுகா ராஜபக்ச, சரித் அசலங்கா, தசுன் ஷானகா ஆகியோரின் 3 விக்கெட்டுகளை தொடர்ந்து வீழ்த்தி ஹாட்ரிக் எடுத்து மிரட்டினார்.

ஐக்கிய அரபு அமீரக அணியின் சுழற்பந்துவீச்சாளரன கார்த்திக் மெய்யப்பன் சென்னையை சேர்ந்தவர் ஆவார். கடந்த 2019ல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு நாள் அணியில் அறிமுகமான அவர், 2020 அண்டர்-19 கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியில் விளையாடி இருந்தார். அவர் சென்னை, அபுதாபி மற்றும் துபாயில் வளர்ந்த நிலையில், அவரது குடும்பம் 2012ல் நிரந்தரமாக துபாயில் குடியேறினர்.

இலங்கை அணி வெற்றி

தொடர்ந்து 153 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ஐக்கிய அரபு அமீரக அணி 17.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து, 73 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இலங்கை அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக துஷ்மந்த சமீர 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest T20worldcup news download Indian Express Tamil App.

Web Title: Watch video karthik meyyappan takes first hat trick sl vs uae tamil news