பிரிஸ்பேனில் உள்ள கபாவில் நடைபெற்று வரும் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நாளில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி மோசமான ஆட்டமிழந்த நிலையில், ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், பகல் இரவு போட்டியாக நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனிலையில் உள்ள நிலையில், 3-வது போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது.
Josh Hazlewood gets Virat Kohli!
— cricket.com.au (@cricketcomau) December 16, 2024
The Australians are up and about on Day Three. #AUSvIND pic.twitter.com/sq6oYZmZAz
Virat Kohli should learn from Dhoni and retire from Test cricket. Why does the BCCI waste so much time on these once-great but now finished players? #ViratKohli #AUSvIND
— Makanichirag (@Makanichirag1) December 16, 2024
Virat Kohli has to score in this 2nd innings or if it rains he should score a 100 in next test first innings otherwise he should retire ffs.
— ArjuN Das (@arjun_1611) December 16, 2024
பிரிஸ்பேனில் உள்ள கபாவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. டிராவிஸ் ஹெட் 152 ரன்களும், ஸ்மித் 101 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகள் வீழு்த்தினார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் எடுத்துள்ளது.
Virat Kohli has lost the hunger to score runs. No other reason 💔 pic.twitter.com/TQrLViSQhJ
— Dinda Academy (@academy_dinda) December 16, 2024
#INDvsAUS
— Mukesh Dudi (@Mkdudi0) December 16, 2024
Virat Kohli and rohit sharma not test players, they exposed badly with this technique, thy must retire otherwise BCCI must fired them..
யஷஸ்வி ஜெய்ஸ்வால் (4), ஷுப்மான் கில் (1) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய முன்னாள் கேப்டன் விராட் கோலி, 16 பந்துகளை சந்தித்து 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஜோஷ் ஹேசில்வுட் பந்துவீச்சில், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியின் ரன் மிஷின் என்று அழைக்கப்படும் கோலி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால், நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
VIRAT KOHLI RETIRE ASAP
— Debarshi Shivam (দেৱৰ্ষি শিৱম)❤️🇮🇳🇯🇵🇸🇬🇳🇿 (@debarshi_shivam) December 16, 2024
இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய அவர். சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் இந்த தொடர் இதுவரை விராட் கோலிக்கு சிறப்பான பயணமாக மையவில்லை. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 5 ரன்களில் ஆட்டமிழந்த அவர், 2-வது இன்னிங்சில் சதம் அடித்து அசத்தினார். இந்த போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடிலெய்டில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் மீண்டும் ரன் குவிக்க போராடிய விராட்கோலி, முதல் இன்னிங்சில் 7 மற்றும் 2-வது இன்னிங்சில் 11 என்று சொற்ப ரன்களில் வெளியேறினார்.
Virat Kohli, Rohit Sharma should retire after this series
— Sports syncs (@moiz_sports) December 16, 2024
Virat Kohli’s ego stops him from accepting his flaws and working on them. Despite having analysts, coaches, and common sense, he refuses to change. Better retire, @imVkohli.
— Mohith (@mohith0710) December 16, 2024
2-வது போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன்பிறகு தற்போது நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியில் விராட்கோலி இழந்த பார்மை மீட்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் இன்னிங்சில் 3 ரன்களில் வீழ்ந்தார். 36 வயதான கோலி, பந்தை எதிர்கொள்ள சிரமப்படுவதாக கூறப்படும் நிலையில், அவர் விரைவில் ஓய்வு பெற வேண்டும் என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.