தன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், தான் தூக்குமேடைக்கும் செல்ல தயார் என்று இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங், பெண் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக மல்யுத்த வீரர்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் இது குறித்து அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அவரை கைது செய்ய வேண்டும் என்று கூறி மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் கடந்த ஒரு மாத காலமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே கடந்த மார்ச் 28-ந் தேதி புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின் போது தங்களுக்கு நீதி வேண்டும் என்று கூறி பேரணி நடத்த முயன்ற மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தங்கள் சர்வதேச போட்டிகளில் வாங்கிய பதக்கங்களை கங்கையில் வீச உள்ளதாக கூறிய நிலையில், வீரர் மற்றும் வீரங்கனைகளை விவசாய சங்கத்தினர் சமாதானப்படுத்தியுள்ளனர்.
#WATCH | "If a single allegation against me is proven, I will hang myself. If you (wrestlers) have any evidence, present it to the Court and I am ready to accept any punishment," says WFI chief and BJP MP Brij Bhushan Sharan Singh pic.twitter.com/hfoB7FOhWc
— ANI (@ANI) May 31, 2023
இதனிடையே "என் மீதான ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், தூக்கு தண்டனைக்கும் தயாரக இருக்கதாக பிரிஜ் பூஷன் சரண் சிங் கூறியுள்ளார். கடந்த 4 மாதங்களாக என் மீது பல குற்றச்சாட்டுகளை சொல்லி என்னை தூக்கிலிட வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அரசாங்கம் என்னை தூக்கிலிடவில்லை என்பதால், அவர்கள் தங்கள் பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாக அறிவித்துள்ளனர்.
“உங்கள் பதக்கங்களை கங்கையில் மூழ்கடிப்பதால் என்னை தூக்கிலிட முடியாது. உங்களிடம் (மல்யுத்த வீரர்கள்) ஏதேனும் ஆதாரம் இருந்தால், அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும், அதில் என் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் எந்த தண்டனையையும் ஏற்க நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். முன்னதாக, பிரிஜ் பூஷன் சரண் சிங், தன் மீதான குற்றச்சாட்டுகள் ஏற்கனவே டெல்லி காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வருவதாகக் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக நேற்று (மே 30) செய்தியாளர்களிடம் பேசிய அவர், 6 முறை பாஜக எம்பியாக இருந்திருக்கிறேன். என் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து வழக்கு டெல்லி காவல்துறையின் விசாரணையில் உள்ளது. குற்றச்சாட்டுகளில் ஏதேனும் உண்மை இருந்தால் (மல்யுத்த வீரர்களால் அவர் மீது சுமத்தப்பட்டது), என்னை கைது செய்யட்டும் என்று கூறியிருந்தார்.
#WATCH | "Let the probe happen, it is in the hands of Delhi Police. If found wrong, then arresting will also take place," WFI chief and BJP MP Brij Bhushan Sharan Singh reacts to #WrestlersProtest in Haridwar pic.twitter.com/GUE10wH6gP
— ANI (@ANI) May 30, 2023
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்களான சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் தங்களது ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை கங்கையில் வீசி எறிய உள்ளதாக தெரிவித்திருந்தனர். ஆனால் விவசாய சங்கத்தின் பிரதிநிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து இந்த திட்டத்தை ஒத்திவைத்துள்ளனர். ஹரித்வாரில் இரண்டு மணிநேர போராட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் உள்ள அவர்களின் போராட்ட இடம் காவல்துறையால் அகற்றப்பட்ட பிறகு ஹரித்வாருக்குச் சென்றனர். இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்றவர், பஜ்ரங் புனியா டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார் மற்றும் சாக்ஷி மாலிக் ரியோ 2016 வெண்கலப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.