டெஸ்ட் போட்டிகளில் விளையாட மறுக்கும் ஹர்த்திக் பாண்டியாவுக்கு பணம் தான் முக்கியமாக என்ற கேள்வி எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்காக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. மேலும் ஆஸ்திரேலிய வீரர்களின் மந்தமான ஆட்டத்தில் இந்த தொடரை இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்தூரில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு தலைமையேற்ற ஸ்டீவ் ஸ்மித், இந்திய அணியை முதல் இன்னிங்சில் 109 2-வது இன்னிங்சில் 163 ரன்களுக்கு சுருட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். இந்த வெற்றிக்கு ஆஸ்திரேலியா அணியின் ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீனும் முக்கிய காரணம்.
இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான க்ரீன் வந்தது பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்தை ஏற்படுத்தியது. அதே சமயம் இந்திய அணியில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இல்லாதது பெரும் பின்னடைவாக அமைந்தது.ஷ
2018-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமான ஹர்திக் பாண்டியா முன்னாள் கேப்டன் கபில்தேவ்க்கு மாற்று என்று குறுகிய காலத்தில் பிரபலமடைந்தார். ஆனால் 2019-ம் ஆண்டு உலககோப்பை தொடருக்கு பின் காயமடைந்த அவர் ஃபார்மில் இல்லாததால் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். அதன்பிறகு 2022-ல் ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக களமிறங்கிய ஹர்திக் கோப்பையை வென்றார்.
அதன்பிறகு இந்திய அணிக்குள் மீண்டும் நுழைந்த அவர் தற்போது டி20 அணியின் கேப்டனாக உள்ளார். ஆனாலும் காயம் காரணமாக சில போட்டிகளில் பந்துவீச்சாமல் இருந்த ஹர்திக் தற்போது சுலபமாக பந்துவீச தொடங்கியிருந்தாலும் சற்று தடுமாற்றம் இருக்க்கிறது. இதனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் குறுகிய ஓவர்களே வீச முடியாத நிலையில், 5 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் எப்படி பந்துவீச முடியும் என் எண்ணத்தில் அவர் இந்திய டெஸ்ட் அணியில் விளையாட ஆர்வம் காட்டவில்லை. அதற்கான பயிற்சியும் எடுக்கவில்லை.
ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக பலகோடி சம்பாதிக்கும் ஹர்திக் பாண்டியா முதலில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறேன். அதன்பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாடுவது குறித்து யோசிக்கிறேன் என்று சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆர்வம் இல்லாமல் டெஸ்ட் போட்டியை புறக்கணிக்க தொடங்கியுள்ள அவர், இந்திய டெஸ்ட் அணியில் விளையாடுவதை கடினமாக பார்க்கிறார்.
இவர் ஏன் டெஸ்ட் கிரிக்கெட்டை புறக்கணிக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. அவரால் டெஸ்ட் போட்டியில் பந்துவீச முடியாது என்று யார் சொன்னது. பணத்துக்காக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விளையாடினால் போதுமா என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் இயான் சேப்பல் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.