IND vs SL 2nd T20 Match 2022 Live Score : இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே புனேவில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில், இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்து வரும் நிலையில், 2-வது டி20 போட்டி இன்று புனே மைதானத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் இந்தியாவின் தொடக்கம் சரியாக அமையாத நிலையில் 6-வது விக்கெட்டுக்கு அக்சர் பட்டேல் தீபக் ஹோடா ஜோடி ரன்கள் குவித்தது.
அதே போல் பந்துவீச்சில் கடைசி ஓவரில் அக்சர் பட்டேல் சிறப்பாக பந்துவீசி வெற்றிக்கு வழி செய்தார். முதல் போட்டியின் வெற்றி இந்திய அணிக்கு உற்சாகத்தை கொடுத்தாலும், இன்றைய போட்டியில் இந்திய அணியின் தொடக்கம் சரியாக அமைய வேண்டும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே புனேவில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில், இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் மைதானத்தில் 2வது டி20 போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி, இலங்கை அணி பேட்டிங் செய்தது.
இலங்கை அணியில், பாதும் நிஸ்ஸான்காவும் குசல் மெண்டிஸும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறப்பாக விளையாடிய குசல் மெண்டிஸ் அரை சதம் அடித்தார். 31 பந்துகளில் 52 ரன்கள் எடுத்திருந்தபோது, யுஸ்வேந்திர சாஹல் பந்தில் எல்.பி.டபில்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார்.
இதையடுத்து வந்த, பானுகா ராஜபக்சா 3 பந்துகளில் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில், உம்ரான் மாலிக் பந்தில் ஸ்டம்ப்பை பறிகொடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக விளையடிய பாதும் நிஸ்ஸான்கா 35 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்தபோது அக்ஷர் படேல் பந்தில் ராகுல் திரிபாதியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்து வந்த சரித் அசலன்கா அதிரடியாக விளயாடினார். அவர் 19 பதுகளில் 37 ரன்கள் எடுத்திருந்தபோது, உம்ரான் மாலிக் பந்தில், சுப்மன் கில் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இவரை அடுத்து வந்த, தனஞ்ஜெய டி சில்வா, அக்சர் படேல் பந்தில் தீபக் ஹூடாவிடம் கேட்ச் கொடுத்து 3 ரன்களுடன் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்.
இவரை அடுத்து வந்த கேப்டன் தாசன் ஷனகா அதிரடியாக விளையாடினார். சிக்சர் மழை பொழிந்து 20 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இவர் 22 பந்துகளில் 6 சிக்ஸ் 2 ஃபோர் என 56 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில், உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளும் அக்ஷர் படேல் 2 விக்கெட்டுகளும் யுஸ்வேந்திர சாஹல் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இஷான் கிஷனும் சுப்மன் கில்லும் பேட்டிங்கில் களம் இறங்கினர். இலங்கை அணி இந்திய அணிக்கு தொடக்கத்திலே அதிர்ச்சி அளித்தது. இஷான் கிஷன் 2 ரன்கள் கசுன் ரஜிதா பந்தில் ஸ்டம்ப்பை பறிகொடுத்து அவுட் ஆனார். சுப்மன் கில் 5 ரன் எடுத்திருந்தபோது, கசுன் ரஜிதா பந்தில் மஹீஷ் தீக்ஷனாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ராகுல் திரிபாதி 5 ரன்கள் எடுத்திருந்தபோது, தில்சன் மதுஷன்கா பந்தில் குசல் மெண்டீஸ் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். தீபக் ஹூடான் 9 ரன்களில் அவுட் ஆனார். இப்படி இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.
ஆனால், இந்திய அணியின் 360 டிகிரி வீரர் சூர்யகுமார் யாதவ், அவருடைய அதிரடியான பாணியில் விளையாடினார். இவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய அக்ஷர் படேல் சூர்யகுமார் யாதவ்வைத் தாண்டி அதிரடி காட்டின் விளையாடினார். இருவரும் அரை சதம் அடித்தனர்.
சூர்யகுமார் யாதவ், அக்ஷர் படேல் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி இலக்கை அடைந்துவிடும் என்று இந்திய அணியின் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தபோது, சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 51 ரன்கள் எடுத்திருந்தபோது, தில்சன் மதுஷன்கா பந்தில் வனிந்து ஹசரங்காவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போதே, இந்திய ரசிகர்களின் நம்பிக்கை குலைந்தது. அக்ஷர் படேல் வெற்றி இலக்குக்கு கொண்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 19.3 ஓவரில் அக்ஷர் படேல் 31 பந்துகளில் 6 சிக்ஸ் 3 ஃபோர்கள் ஏன 65 ரன்கள் எடுத்திருந்தபோது தாசன் ஷனகா பந்தில் தனஞ்ஜெய டி சில்வாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். 15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஷிவம் மாவி அவுட் ஆனார். உம்ரான் மாலிக் 1 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து போராடி தோல்வி அடைந்தது. இதன் மூலம் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சம நிலையில் உள்ளன.
- 23:51 (IST) 05 Jan 2023உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தம்; ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு
ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, உக்ரைனில் வரும் 6, 7 ஆகிய தேதிகளில் ரஷ்ய ராணுவம் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்படுகிறது என ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
- 23:43 (IST) 05 Jan 2023இந்தியாவின் 79வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார் காரைக்குடியை சேர்ந்த 15 வயது பிரனேஷ்
காமன்வெல்த் போட்டியில் வெள்ளி, ஆசிய செஸ் போட்டியில் தங்கம்,16 வயதுக்குட்பட்ட சர்வதேச செஸ் தொடரில், காரைக்குடியை சேர்ந்த 15 வயது பிரனேஷ் வெண்கலம் வென்று இந்தியாவின் 79வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
- 22:47 (IST) 05 Jan 2023இந்திய அணி போராடி தோல்வி
இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே புனேவில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில், இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 21:53 (IST) 05 Jan 2023இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழந்து தடுமாற்றம்
இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டியில், 207 ரன்கள் இலக்குடன் விளையாடி வரும் இந்திய அணி, 9.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்து தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது. அக்சர், சூர்யகுமார் களத்தில் உள்ளனர்.
- 21:28 (IST) 05 Jan 2023ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் ஜுபைருக்கு எதிராக எந்த குற்றமும் இல்லை; ஐகோர்ட்டில் டெல்லி காவல்துறை தகவல்
ட்விட்டர் மூலம் பெண் குழந்தையை மிரட்டி சித்திரவதை செய்ததாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்.சி.பி.சி.ஆர்) புகாரின் பேரில் ஜுபைர் மீது டெல்லி காவல்துறையின் சைபர் செல் பிரிவு பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், இந்த வழக்கில் புகார்தாரரான என்.சி.பி.சி.ஆர் தலைவர் பிரியங்க் கனூங்கோ மற்றும் ட்விட்டரில் ஜுபைர் பதிலளித்த ட்விட்டர் பயனருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜுபைர் மனு தாக்கல் செய்தார்.
என்.சி.பி.சி.ஆர் புகாரானது, ஆகஸ்ட் 6, 2020-ல் ஜுபைர் பகிர்ந்த ஒரு ட்வீட்டைக் குறிப்பிடுகிறது. அதில் ஒரு சிறுமியின் புகைப்படம் முகத்தை மங்கலாக்கி இருந்தது.
டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நந்திதா ராவ், நீதிபதி அனுப் ஜெய்ராம் பம்பானி தனி நீதிபதி அமர்வு முன், “ஜுபைரைப் பொறுத்த வரையில் எந்தக் குற்றமும் இல்லை” என்றும், குற்றப்பத்திரிகையில் அவரது பெயரைச் சேர்க்கவில்லை என்றும் தெரிவித்தார். அதன்பிறகு, உயர்நீதிமன்றம், மேலும், நடவடிக்கை எடுப்பதற்கு முன், குற்றப்பத்திரிகையை பதிவு செய்ய வேண்டும் என்று கூறியது.
என்.சி.பி.சி.ஆர் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜ், இந்த விவகாரத்தில் கூடுதல் உத்தரவுகளை எடுப்பதாக தெரிவித்தார். ஜுபைரின் வழக்கறிஞரை அவர் வழக்கைத் தொடர விரும்புகிறாரா இல்லையா என்பதை ஜுபைரிடமிருந்து பெறுமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. இந்த வழக்கு மார்ச் 2-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
ஜுபைர் செய்த ட்வீட் அடையாளம் காணக்கூடிய குற்றமாக இல்லை என்று டெல்லி காவல்துறை தனது நிலை அறிக்கையை மே 2022-ல் தாக்கல் செய்தது. என்.சி.பி.சி.ஆர் உயர்நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் பிரதிவாதி 2 ஆக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது இந்த வழக்கில் டெல்லி காவல்துறையின் நிலைப்பாடு "தவறானது மற்றும் காவல்துறையின் சாதாரண அணுகுமுறையைக் குறிக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளது.
- 19:20 (IST) 05 Jan 2023இலங்கை அணி 3 ஓவர்களில் 32 ரன்கள்
இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்து வரும் இலங்கை அணி 3 ஓவர்கள் முடிவில் 32 ரன்கள் குவித்துள்ளது. நிஷங்கா 11 பந்துகளில் 3 ரன்களும், குஷால் மென்டீஸ் 12 பந்துகளில் 2 சிக்சர் ஒரு பவுண்டரியுடன் 21 ரன்களும் குவித்துள்ளனர்.
- 18:49 (IST) 05 Jan 2023டாஸ் வென்ற இந்திய பந்துவீச முடிவு
இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இலங்கை அணி முதலில் களமிறங்கி விளையாட உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.