டி20 உலககோப்பை தொடர் முடிந்த பிறகு இந்திய அணி நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக 3 வகையாக தொடரில் விளையாட உள்ள நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
8-வது டி20 உலககோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பி.பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய இந்திய அணி 3 போட்டிகளில் 2 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. இதனிடையே டி20 உலககோப்பை தொடர் முடிந்து இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்த தொடரில் முதல் டி20 போட்டி நவம்பர் 18-ந் தேதி வெலிங்டனில் நடைபெறுகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டி முறையே நவம்பர் 20ஆம் தேதியும், நவம்பர் 22ஆம் தேதியும் நடைபெறும். இந்த தொடருக்கான இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னாள் கேப்டன் விராட்கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ரோகித் சர்மா இல்லாத நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் ஒருநாள் அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இரு அணிகளிலும் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் இரு அணிகளிலும் சேர்க்கப்பட்டார். அதே நேரத்தில் ஷாபாஸ் அகமது ஒருநாள் தொடரில் தனது இடத்தைக் தக்கவைத்துள்ளார்.
ஆனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட அணியில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் இரு அணிகளுக்கும் துணை கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து தொடர் முடிந்து இந்திய அணி அடுத்து வங்கதேச சுற்றுப்பயணம் சென்று 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான அணிக்கு ரோகித் சர்மா மீண்டும் கேப்டன் பதவிக்கு திரும்பியுள்ளார். ராகுல் திரிபாதி ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள், ஒருநாள் போட்டிக்கான அறிமுக வீரராக அணியில் சேர்க்கப்பட்டள்ளார். நியூசிலாந்து தொடரில் இடம்பெறாத கே.எல்.ராகுல், வங்கதேச அணிக்கு எதிரான இந்திய அணியின் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி டிசம்பர் 4ஆம் தேதியும், இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டி முறையே டிசம்பர் 7 மற்றும் 10ஆம் தேதியும் நடைபெறும்.
டெஸ்ட் தொடர் டிசம்பர் 14-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டியுடன் தொடங்கி, டிசம்பர் 22-ம் தேதி தொடங்கும் இரண்டாவது போட்டியுடன் முடிவடையும்.
நியூசிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணி
ஹர்திக் பாண்டியா (கே), ரிஷப் பந்த் (து.கே. வி.கீ), ஷுப்மன் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் (வி.கே), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், முகமது. சிராஜ், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.
ஒருநாள் போட்டிக்கான அணி:
ஷிகர் தவான் (கே), ரிஷப் பந்த் (து.கே. வி.கீ), ஷுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் (வி.கே.), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஷாபாஸ் அகமது, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் , தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.
வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கே), கேஎல் ராகுல் (து.கே.), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த் (வி.கீ) இஷான் கிஷன் (வி.கீ.), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் , முகமது. ஷமி, முகமது. சிராஜ், தீபக் சாஹர், யாஷ் தயாள்
டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கே), கே.எல். ராகுல் (து.கே), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (வி.கீ.), கே.எஸ்.பாரத் (வி.கீ.), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.