அதிவேக இரட்டை சதம்: கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த இஷன் கிஷான்

வங்கதேசத்திற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா விலகியதை தொடர்ந்து இஷான் கிஷன் தொடக்க வீரராக களமிறங்கினார்.

வங்கதேசத்திற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா விலகியதை தொடர்ந்து இஷான் கிஷன் தொடக்க வீரராக களமிறங்கினார்.

author-image
WebDesk
New Update
அதிவேக இரட்டை சதம்: கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த இஷன் கிஷான்

உலகிலேயே குறைந்த பந்துகளில் அதிவேகமாக இரட்டை சதம் கடந்து இந்திய இளம் வீரர் இஷான் கிஷன் சாதனை படைத்துள்ளார்.

Advertisment

அடுத்து வரும் 50 ஓவர் உலககோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை சந்தித்து.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கிய இந்திய அணி வெற்றியை நெருங்கிய நிலையில், 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை இழந்தது. இதனால் இந்திய அணி கடும் விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில், 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

publive-image
Advertisment
Advertisements

இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஏற்கனகே காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா, குல்தீப் சென் போட்டியில் இருந்து விலகிய நிலையில் குல்தீப் யாதவ் புதிதாக அணியில் சேர்க்கப்பட்டார். கே.எல்.ராகுல் கேப்டன் பொறுப்பேற்றுள்ளார்.

இதனிடையே முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஷிகர் தவான், இஷான் கிஷன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் 5-வது ஓவரின் முதல் பந்தில் ஷிகர் தவான் (3) ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய முன்னாள் கேப்டன் விராட்கோலி இஷான் கிஷானுடன் ஜோடி சேர்ந்தார். இநத ஜோடி வங்கதேச அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி ரன்கள் சேர்த்தது.

இவர்களின் அதிரடியில் இந்திய அணியின் ஸ்கோர் மின்னல்வேகத்தில் உயர்ந்த நிலையில், இஷான் கிஷன் 85 பந்துகளில் சதமடித்து அசததினார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், அடுத்து 41 பந்துகளில் மேற்கொண்டு 100 ரன்கள் எடுத்து 126 பந்துகளில் இரட்டை சதம் கடந்தார். இதன் மூலம் உலகளவில் குறைந்த பந்துகளில் அதிவேகமாக இரட்டை சதம் கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். இறுதியில் 131 பந்துகளில் 24 பவுண்டரி 10 சிக்சர்களுடன் 210 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்த போட்டியில் இரட்டை சதம் அடித்த இஷான் கிஷன், வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு கெயில், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 138 பந்துகளில் இரட்டை சதம் அடித்ததே ஒருநாள் போட்டியில் அடிக்கப்பட்ட அதிவேக இரட்டை சதமாக இருந்தது. ஆனால் தற்போது 126 பந்துகளில் இரட்டை சதம் அடித்து இஷான் கிஷன் சாதனை படைத்துள்ளார்.

publive-image

மேலும் இந்தியாவில், சச்சின், ரோகித் சர்மா, சேவாக் ஆகியோருக்கு அடுத்தப்படியாக ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் கடந்த 4-வது இநதிய வீரர் என்ற பெருமை பெற்றார். அதேபோல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இரட்டை சாதம் கடந்த 7-வது வீரர் இஷான் கிஷன் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியாவில், சச்சின், ரோகித் சர்மா, சேவாக், நியூசிலாந்தில், குப்தில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் கெயில், பாகிஸ்தான் அணியின் பஃகர் ஜமான் ஆகியோர் இதற்கு முன்பு ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்துள்ளனர். இதில் இந்தியாவின் ரோகித் சர்மா 3 முறை இரட்டை சாதம் கடந்து சாதனை படைத்துள்ளார். மேலும் வங்கதேச மண்ணில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சனை (185) பின்னுக்கு தள்ளி .ஷான் கிஷன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

அதேபோல் வெளிநாடுகளில் நடந்த போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான 1999-ம் ஆண்டு தொடக்க வீரராக களமிறங்கிய முன்னாள் கேப்டன் கங்குலி எடுத்த 183 ரன்களே தனிநபர் அதிகபட்ச ஸ்கோராக இருந்த நிலையில், தற்போது இரட்டை சதம் கடந்து கங்குலியின் சாதனையை தகர்த்துள்ளார் இஷான் கிஷன்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cricket Ind Vs Ban Ishan Kishan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: