கவலை தரும் ஃபர்பாமன்ஸ்: ஆர்.சி.பி மீண்டு வர என்ன வழி? முன்னாள் வீரர்கள் கருத்து

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் முந்தைய சீசன் செயல்பாடு மற்றும் 2024 ஐபிஎல்-ல் விராட் கோலியின் ஆட்டத்திறன் பற்றி தங்கள் கருத்துகளைப் முன்னாள் வீரர்கள் பகிர்ந்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Virat Kholi 2025 IPL

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின், 18-வது சீசன் வரும் மார்ச் 22-ந் தேதி தொடங்க உள்ள நிலையில், ஜியோஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் ‘பவர் ப்ளே’ என்ற சிறப்பு நிகழ்ச்சியில், டாடா ஐபிஎல் நிபுணர்களான ஏ.பி.டி வில்லியர்ஸ், ஷேன் வாட்சன், கிரேம் ஸ்மித், ஸ்காட் ஸ்டைரிஸ், ஆகாஷ் சோப்ரா மற்றும் பலர் பஙகேற்றனர். இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் முந்தைய சீசன் செயல்பாடு மற்றும் 2024 ஐபிஎல்-ல் விராட் கோலியின் ஆட்டத்திறன் பற்றி தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.

Advertisment

விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் பற்றிய நிபுணர்களின் கருத்து:

கிரேம் ஸ்மித்: கடந்த சீசனில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் மீதான விமர்சனங்கள் நியாயமற்றவை. ஆர்.சி.பி பேட்டிங் வரிசையின் முழு சுமையையும் அவர் தனியாக சுமந்தார். மற்றவர்கள் சிறப்பாக ஆடாதபோது, ஒரு பேட்ஸ்மேனுக்கு இது பெரிய பொறுப்பு. அதை விராட்கோலி சிறப்பாக செய்தார் என்று கூறியுள்ளார்.

ஏபி டி வில்லியர்ஸ்: விராட் மீதான ஸ்ட்ரைக் ரேட் விமர்சனங்கள் முட்டாள்தனமானவை. அவர் அணிக்குத் தேவையானதைச் செய்தார். ஸ்ட்ரைக் ரேட் பற்றி பேசுவது பயனற்றது. எந்த பேட்ஸ்மேனும் அணியின் ஆதரவைப் பொறுத்து தனது ஆட்டத்தை மாற்றுகிறார். ஆதரவு இல்லாதபோது, அவர் தனது இயல்பான ஆட்டத்துடன் வெற்றிக்காக முயற்சி செய்கிறார் என்று கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

ஸ்காட் ஸ்டைரிஸ்: பவர் ப்ளேயில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் பிரச்சினையாக இல்லை. ஆனால், நடு ஓவர்களில் வேகத்தை மாற்றுவதில் அவருக்கு சிரமம் ஏற்பட்டது என்று கூறியுள்ளார்.

ஷேன் வாட்சன்: கோலி பவர் ஹிட்டிங்கை இழந்துவிட்டாரா என்ற கேள்வி எழுந்தது. அவரது ஆட்டம் பாதுகாப்பாக உள்ளது. ஆனால், இன்றைய கிரிக்கெட்டில் சுதந்திரமாக ஆடாவிட்டால் எதிர்காலத்தில் பின்னடைவு ஏற்படலாம் என்று கூறியுள்ளார்.

ஆர்.சி.பி நிர்வாகம் பற்றி வெங்கடேஷ் பிரசாத்: ஒரு அணியின் நிர்வாகம் எப்படி உள்ளதோ, அதுவே அதன் வெற்றியை தீர்மானிக்கிறது. மற்ற அணிகள் உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கின்றன. ஆனால் ஆர்.சி.பி ஏன் அப்படி செய்யவில்லை? பிராண்ட் உருவாக்கத்திற்கா அல்லது ஐபிஎல் வெற்றிக்காகவா முயல்கிறார்கள்? வீரர்களின் திறனை உயர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

விராட் கோலியின் முன்னேற்றம் பற்றிய நிபுணர்களின் கருத்து:

ஆகாஷ் சோப்ரா: இந்த கட்டத்திலும் விராட் புதியவற்றைக் கற்று, புதிய உத்திகளை ஏற்றுக்கொள்கிறார். அதுதான் உண்மையான சாம்பியனின் அடையாளம் என்று கூறியுள்ளார்.

மைக் ஹெஸன்: நடு ஓவர்களில் ஹிட்டிங்கை அதிகரிக்க ‘ஸ்லாக் ஸ்வீப்’ ஷாட்டை தனது ஆட்டத்தில் சேர்த்துள்ளார். இது அவரது ஆட்டத்திற்கு புதிய பரிமாணத்தை கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.

ஏபி டி வில்லியர்ஸ்: புதிய உத்திகளை முயற்சிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆர்.சி.பி-க்கு ஐபிஎல் வெற்றி அவரது அற்புத வாழ்க்கைக்கு சரியான முடிவாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

ராபின் உத்தப்பா: விராட் கோலியின் வளர்ச்சி அவரது பயணத்தின் இயல்பான பகுதி. புதிய உத்திகள் அவரது ஆட்ட உத்தியின் முக்கிய அம்சம் என்று கூறியுள்ளார்.

ஆர்.சி.பி-யின் முந்தைய சீசன் பற்றிய பகுப்பாய்வு

பிரெட் லீ: "தொடக்கத்தில் எல்லோரும் ஆர்.சி.பி-யை புறக்கணித்தனர். ஆனால் நான் அவர்களை வெற்றி அணியாக தேர்ந்தெடுத்தேன். அவர்கள் எட்டிய இடத்தைப் பாருங்கள் என்று கூறியுள்ளார்.

ஆகாஷ் சோப்ரா: "ஒரு கட்டத்தில் பிளேஆஃப் வாய்ப்பு பூஜ்ஜியமாக இருந்தது. ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. அதிர்ஷ்டமும் உழைப்பும் சேர்ந்து சீசனை நினைவில் வைத்திருக்கும் வகையில் அமைத்தது என்று கூறியுள்ளார்.

ஏபி டி வில்லியர்ஸ்: "ஆர்.சி.பி-யின் முயற்சியும் செயல்பாடும் குறிப்பிடத்தக்கவை. கோப்பை வெல்லாவிட்டாலும் இந்த சீசனைப் பற்றி பெருமைப்படலாம் என்று கூறியுள்ளார். இந்த நிபுணர்களின் பகுப்பாய்வை ‘பவர் ப்ளே’ நிகழ்ச்சியில் காணலாம். ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் கிடைக்கிறது.

Ipl Cricket

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: