Cricket News In Tamil: நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் அவுட் ஆனபோது, விராட் கோலி நடந்துகொண்ட விதம் வீடியோவாக வெளியாகி சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. விராட் கோலி அப்படி நடந்து கொண்டிருக்க கூடாது என பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் 5-0 என டி 20 தொடரை அமோகமாக கைப்பற்றியது. அதில் யார் கண் பட்டதோ, ஒரு நாள் போட்டித் தொடரிலும், டெஸ்ட் தொடரிலும் செமையாக அடி வாங்கியது. திங்கட்கிழமை (இன்று) முடிவுக்கு வந்த 2-வது டெஸ்டில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி, 0-2 என டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது.
இதற்கிடையே முந்தைய நாள் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் அவுட் ஆனபோது, அவரை வழியனுப்பும் விதமாக ரசிகர்களை நோக்கி வாயில் கை வைத்தபடி, கைகளை வேகமாக கீழ் நோக்கி அசைத்து ஒரு செய்கையை வெளிப்படுத்தினார் கோலி. இந்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆனது. இந்திய கேப்டன் இப்படி நடந்து கொண்டிருக்க கூடாது என பலரும் கருத்து கூறினர்.
இதற்கிடையே இன்று ஆட்டம் முடிந்ததும் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், நியூசிலாந்து செய்தியாளர் ஒருவர் இது பற்றி கிளறினார். ‘இந்திய கேப்டனாக களத்தில் சிறந்த முன்னுதாரணமாகத் திகழவேண்டும் என நீங்கள் நினைக்கவில்லையா?’ என குறிப்பிட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி அந்த நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு, ‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என பதில் கேள்வி எழுப்பினார் கோலி.
ICC Will Gift Another Spirit Of The Cricket Award To Virat Kohli For His Gentle & Polite Send Off To Kane Williamson.
Absolute Pathetic!#NZvIND ????
pic.twitter.com/wlNR8EHgCe— CriCkeT KinG???????????? (@imtheguy007) March 1, 2020
அதற்கு அந்த நிருபர், ‘நான் உங்களிடம் கேள்வி கேட்கிறேன்’ என்றார். மீண்டும் விடாத கோலி, ‘நான் உங்களிடம் பதிலைக் கேட்கிறேன்’ என்றார். சற்றே விரக்தியுடன் காணப்பட்ட கோலி, ‘நீங்கள் விடையை கண்டு பிடிப்பதுடன் அல்லாமல், நல்ல கேள்வியுடன் வாருங்கள். அரைகுறையான கேள்வியுடனும், அரைகுறை தகவல்களுடன் நீங்கள் இங்கு கேள்வி கேட்க முடியாது. மேலும் நீங்கள் சர்ச்சை உருவாக்க விரும்பினால், அதற்கு உரிய இடம் இதுவல்ல. நடந்த நிகழ்வு பற்றி நான் போட்டி நடுவரிடம் பேசினேன். அவருக்கு அதில் எந்தப் பிரச்னையும் இல்லை’ என்றார் கோலி.
நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனுன், ‘களத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொள்பவர் கோலி. அதற்குள் அதிகமாக நாங்கள் செல்ல விரும்பவில்லை’ என பெருந்தன்மையுடன் பதில் அளித்தார். எனினும் கோலியின் அந்த செய்கை, கிரிக்கெட்டை நேசிக்கும் ரசிகர்களுக்கு சற்றே ஏமாற்றம்தான். இந்திய அணி பெற்ற தோல்விகளைவிட இது அதிக வலியைத் தரும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.