Advertisment

ஒன்டே மேட்ச் ஆட சொன்னா டெஸ்ட் ஆடுறீங்களே... அறிமுக போட்டியில் சறுக்கிய ருத்துராஜ்

தொடக்கத்தில் மெதுவாக விளையாடினாலும் போக போக தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ரன் உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்தவர்.

author-image
WebDesk
New Update
ஒன்டே மேட்ச் ஆட சொன்னா டெஸ்ட் ஆடுறீங்களே... அறிமுக போட்டியில் சறுக்கிய ருத்துராஜ்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ருத்துராஜ் கெய்க்வாட் தனது முதல் ஒருநாள் போட்டியில் ரன் குவிக்க திணறியது வலைதளங்களில் தற்போது பேசும்பொருளாக மாறியுள்ளது.

Advertisment

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ருத்துராஜ் கெய்க்வாட். தொடக்க ஆட்டக்காராக களமிறங்கும் இவர் தொடக்கத்தில் மெதுவாக விளையாடினாலும் போக போக தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ரன் உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்தவர்.

கடந்த 2 சீசன்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் இவர், இதுவரை இந்திய அணிக்காக டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று வந்தார். இதனிடையே தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு தேர்வான ருத்துராஜ் நேற்று இந்திய அணிக்காக தனது முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கினார்.

லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டி மழை காரணமாக 40 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில், முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்க அணி 40 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. அடுத்து 250 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

வழக்கத்திற்கு மாறாக இந்த போட்டியில் 3-வது வரிசையில் களமிறங்கிய ருத்துராஜ் கெய்க்வாட், 42 பந்துகளை சந்தித்து 1 பவுண்டரியுடன் 19 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், சுப்மான் கில் விரைவில் வெளியேறிய நிலையில், 3-வது வீரராக வந்த ருத்துராஜூன் இந்த ஆட்டம் சென்னை ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதனால் அவரின் முதல் ஒருநாள் போட்டி ஸ்டைகிரேட் மற்றும் ஐபிஎல் தொடரில் அவரின் ரன்குவிப்பு ஆகியவற்றை வைத்து மீம்ஸ் வெளியிட தொடங்கிவிட்டனர் ரசிகர்கள். ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ருதுராஜ், 2021 சீசனில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார்.

அந்த சீசனில் 16 போட்டிகளில் 635 ரன்கள் எடுத்த ருத்துராஜ்க்கு அவரது அறிமுக ஒருநாள் போட்டி கைகொடுக்காமல்போய்விட்டது. இந்த போட்டியில் ருதுராஜ் அதிக பந்துகளை டாட் செய்துவிட்டார். இதுவே போட்டியின் முடிவை இந்தியாவிற்கு பாதகமாக மாற்றியது என்று சொல்லாம். 40 ஓவர்களில் 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 40 ஓவர்களில் 240 ரன்களை மட்டுமே எட்ட முடிந்தது.

இந்திய அணியின் தொடக்க விக்கெட்டுகள் விரைவில் வீழ்ந்தாலும இறுதிகட்டத்தில் சஞ்சு சாம்சன் 63 பந்துகளில் 86 ரன்கள் குவித்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றாலு இறுதியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து. கெய்க்வாட் தான் சந்தித்த 42 பந்துகளில் இன்னும் சில ரன்களை எடுத்திருந்தால், போட்டியின் முடிவு வேறுவிதமாக இருந்திருக்கும்.

டி20 தொடரை 2-1 என கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் தொடரில் 0-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ள நிலையில், இந்த போட்டிகளில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Indian Cricket Team Ruturaj Gaikwad
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment